பூமிக்கு பக்கத்துல இப்படியொரு ‘கோள்’ இருக்கா..! உள்ள மட்டும் என்ன இருக்குன்னு தெரிஞ்சா ‘தலை சுத்தி’ போயிருவீங்க.. ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கணக்கில் அடங்காத மதிப்புள்ள தங்கம் இருக்கும் சிறுகோள் குறித்து நாசா ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூரியக் குடும்பத்தில் தங்கம், இரும்பு உள்ளிட்ட உலோகங்கள் நிறைந்திருக்கும் ‘கோல்டுமைன் ஆஸ்டிராய்டு’ (Goldmine asteroid) என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1852 மார்ச் 17-ம் தேதி இத்தாலிய வானியலாளர்கள் இந்த சிறுகோளை கண்டுபிடித்தனர். இதற்கு கிரேக்க கடவுளின் பெயரான ‘சைக்கி’ (Psyche) எனப் பெயரிட்டனர். 124 மைல் அகலமுள்ள இந்த சிறுகோள் பூமியில் இருந்து சுமார் 200 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது.
இந்த சிறுகோளில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு மட்டும் சுமார் 10,000 குவாட்ரில்லியனுக்கு (Quadrillions) மேல் இருக்கும் என நாசா கணித்துள்ளது. ஒரு குவாட்ரில்லியன் என்றால் 1-ஐ தொடர்ந்து அதன் பின்னால் 15 பூஜ்ஜியங்களைத் சேர்த்தால் கிடைக்கும் ஒரு மாபெரும் தொகை. அப்படி இருக்கையில் 10,000 குவாட்ரில்லியன் என்றால் அதன் மதிப்பை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்.
நாசாவைப் பொறுத்தவரை இந்த சிறுகோளில் தங்கம் மட்டுமல்லாமல் இரும்பு உள்ளிட்ட உலோகங்களும் நிறைந்திருக்கும் என கணித்துள்ளது. அதன்படி, உலோகங்கள் நிறைந்திருக்கும் சிறுகோள்கள் வரிசையில் இந்தக் கோளை நாசா வகைப்படுத்தியுள்ளது. வரும் 2026-ம் ஆண்டுக்குள் அந்த கோளின் தோற்றத்தைக் கண்டுபிடிக்கவும் நாசா ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி முதல் கட்டமாக சிறுகோளில் வெப்பநிலையை கண்டறியும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த திட்டத்துக்கு இந்தியாவைச் சேர்ந்த கல்யாணி சுகத்மே மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மும்பையில் பிறந்து வளர்ந்த அவர், இயற்பியல் மற்றும் பொறியலில் இளங்கலை பட்டத்தை நிறைவு செய்தார். தற்போது அமெரிக்காவின் நாசாவில் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'குறுங்கோள் ஒண்ணு கிராஸ் பண்ண போகுது...' ஒருவேளை 'பூமிய' முட்டுற மாதிரி வந்துச்சுன்னா 'அப்படி' பண்ணிடலாம்...! - சீன ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த ஐடியா...!
- புதிய 'கோள்' கண்டுபிடிப்பு...! 'பெயர்' என்ன வச்சுருக்காங்க தெரியுமா...? பார்க்க 'அது' மாதிரியே இருக்கு...! - நாசா விஞ்ஞானிகள் தகவல்...!
- 'நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசா'... 'ராக்கெட் தயாரிக்கும் பொறுப்பில் அசத்தும் 'கோவை பெண்'... பின்னணி தகவல்கள்!
- 'நாங்க ஜெயிச்சிட்டோம்'... 'மாஸாக அறிவித்த நாசா'...'ஆனா சைலண்டா பின்னணியில் இருக்கும் இந்தியர்'... யார் இந்த சுவேதா மோகன்?
- நிலாவுக்கு பறக்கும் ‘இந்தியர்’.. நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
- 'ஒன்னு ரெண்டு எடத்துல மட்டுமில்ல'... 'உலகம் முழுதுவமே நடந்த வியத்தகு மாற்றம்?!!... 'கொரோனாவின் கோரதாண்டவத்திற்கு இடையில்'... 'நாசா பகிர்ந்த மகிழ்ச்சி தகவல்!!!'...
- VIDEO: 'சூரரைப் போற்று' பாணியில்... வரலாற்று சாதனை!!.. 'எலான் மஸ்க்'-இன் SpaceX நிறுவனம் கொடுத்த ஷாக்!.. அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்!
- இன்னும் 2 நாள்ல.. '38,624 கிமீ வேகத்தில்'.. பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல்.. அதிரவைக்கும் நாசா!
- VIDEO: என்ன?.. உலக்கத்துல இருக்குற எல்லோருமே கோடீஸ்வரர்களா!?.. அவ்ளோ தங்கம், வைரம் குவிஞ்சுகிடக்குது!.. அள்ளிவர தயாராகும் உலக நாடுகள்!
- ஹை ஃபை வாழ்க்கை... கடவுள் வழிபாடு!.. செவ்வாய் கிரகத்தில் 'ஏலியன்ஸ்' செய்த 'சம்பவங்கள்'!.. ஆய்வாளர்கள் அதிர்ச்சி!