"ஆஹா, இவ்ளோ Galaxy இருக்கா??.." பிரபஞ்சத்தின் அதிசயம்.. உலகையே மிரள வைத்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதும் பலரால் எதிர்பார்க்கப்பட்ட நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி (James Webb Telescope) எடுத்த முதல் புகைப்படம் ஒன்றை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | கர்ப்பிணி பெண் இணையத்தில் தேடிய தகவல்.. "அடுத்த கொஞ்ச நாளுலயே காணாம போய்ட்டாங்களா??.." திடுக்கிட வைக்கும் பின்னணி

இந்த புகைப்படம் தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிகம் வைரலாகி வருவதால், பலருக்கும் கடும் பிரமிப்பையும் இந்த புகைப்படம் ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு காரணம், ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி எடுத்த புகைப்படம் மூலம், பிரபஞ்சத்தின் முதல் வண்ண படம் தற்போது வெளியாகி உள்ளது.

James Webb Telescope

அது மட்டுமில்லாமல், பல லட்சம் விண்மீன் மண்டலம், நட்சத்திரங்கள், கிரகங்கள் உள்ளிட்டவற்றையும் இதில் காண முடியும். உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு மையமாக திகழும் அமெரிக்காவின் நாசா மையம், விண்வெளியில் இருந்து ஏராளமான, இதுவரை அறிந்திராத விஷயங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி ஏராளமான அதிசயங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, ஐரோப்பா மற்றும் கனடாவின் விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து, ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கி ஒன்றை அமெரிக்காவின் நாசா உருவாக்கி இருந்தது. இந்த தொலைநோக்கியை சுமார் 80,000 கோடி ரூபாய் செலவிலும் அவர்கள் உருவாக்கி இருந்தனர். அதே போல, இந்த தொலைநோக்கி தற்போது பூமியில் இருந்து சுமார் 10 லட்சம் மைல்கள் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுக்கிறது.

வெளியான கலர்ஃபுல் புகைப்படம்

இதன் மூலம், பூமியில் இருந்து பல மில்லியன் ஒளி ஆண்டுகளில் இருக்கும் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் உள்ளிட்டவற்றை ஆராய முடியும். அந்த வகையில் தான், அங்கிருந்த படி ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, பிரபஞ்சத்தை படம் பிடித்து அனுப்பியுள்ளது.

இந்த புகைப்படத்தில் பல லட்சம் விண்மீன் மண்டலம், பால்வெளி மண்டலங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 300 கோடி ஆண்டுகள் பயணம் செய்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக நாசாவின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுவரை வெளியான பிரபஞ்சத்தின் புகைப்படங்களிலேயே, மிகவும் ஆழமான, சிறந்த Resolution-ல் எடுக்கப்பட்ட புகைப்படம் இது தான்.

வியந்து பார்க்கும் மக்கள்

கடந்த 2021 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட இந்த தொலைநோக்கி, புகைப்படத்தை எடுத்து அனுப்ப சுமார் ஆறு மாதத்திற்கு மேல் ஆகி உள்ளது. அதே வேளையில், இந்த புகைப்படத்தை எடுக்கவே தொலைநோக்கிக்கு ஒரு நாள் வரை ஆனதாகவும், அதனை process செய்து வெளியிட இத்தனை நாட்கள் எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மிக அழகான, பிரபஞ்சத்தின் கலர்ஃபுல் படத்தை பார்க்கும் மக்கள் பலரும், விஞ்ஞானிகளை பாராட்டுவதுடன் வியப்பில் ஆழ்ந்து போயுள்ளனர்.

Also Read | "அதிர்ஷ்டம் கூரை'ய பிச்சுக்கிட்டு தாறுமாறா குடுத்து இருக்கே.." 3 வாரத்துல ரெண்டு தடவ.. தமிழருக்கு துபாயில் அடித்த ஜாக்பாட்..

NASA, TELESCOPE, NASA JAMES WEBB SPACE, NASA JAMES WEBB SPACE TELESCOPE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்