'ஒரு கையெழுத்துக்கு இத்தனை பேனாக்களா?'... 'டிரம்ப் பதவி நீக்கத் தீர்மானம்!'... 'அமெரிக்காவில் பரபரப்பு'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவி நீக்கம் தொடர்பான தீர்மானத்தில், பல பேனாக்கள் பயன்படுத்தி கையெழுத்திடப்பட்டுள்ளன.
அமெரிக்கப் பாராளுமன்றத்தின் கீழ் அவையில், அதிபர் டிரம்ப் மீது பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும், பாராளுமன்ற கீழ் அவையின் சபாநாயகருமான நான்சி பெலோசி, பதவி நீக்கத் தீர்மானத்தில் கையொப்பமிடும் போது பல பேனாக்கள் பயன்படுத்தியது சர்ச்சையாகி உள்ளது.
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அமெரிக்க காங்கிரஸை அவமதித்தல் ஆகிய டிரம்ப்புக்கு எதிரான இரு தீர்மானங்களில், பெலோசி கையெழுத்திட்டார்.
அரசாங்கத்தின் முக்கியமான கொள்கை முடிவுகள், வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவங்கள் போன்ற தருணங்களில், பல பேனாக்கள் பயன்படுத்தப்படுவது அமெரிக்க நிர்வாகத்தில் வாடிக்கையாக இருந்து வருகிறது. கையெழுத்திட பயன்படுத்திய பேனாக்கள், செய்தியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் நான்சி, பதவி நீக்கத் தீர்மானத்தில் மகிழ்ச்சியுடன் கையெழுத்திட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ட்ரம்ப்' என்னை முத்தமிட அழைத்தார்... அம்பலப்படுத்திய பெண் 'நிருபர்'... பாலியல் புகாரால் 'அதிர்ந்த அமெரிக்கா'...
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- அப்படி என்ன பிரச்சனை? இந்தியாவை மீண்டும் சீண்டும் டிரம்ப்!
- இந்திய அரசை மிரட்டும் டிரம்ப்! அதிர்ச்சியளிக்கும் காரணம்?
- ’நல்லது.. அந்த நாட்டுக்கு ஆதரவா இல்ல’.. உலகப்புகழ் தமிழரை அழைத்துப் பாராட்டிய ட்ரம்ப்!
- 'மோடியும் இவரும் ஒண்ணு'...மோடியை கிண்டலடித்த நெட்பிளிக்ஸ் ஷோ...ட்ரெண்டிங்யில் காமெடியன்!