'அதிபர் வீடியோ காலில் இருக்கிறப்போ...' 'நிர்வாணமா குளிச்சிட்டு இருந்த ஊழியர்...' 'ஷாக் ஆன அதிபர்...' 'எப்படின்னு விசாரிச்சப்போ தான்...' வைரல் சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா அச்சம் காரணமாக அனைத்து நாடுகளும் அவர்களுடைய ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதித்துள்ளது. அதன் காரணமாக வொர்க்  ஃப்ரம் ஹோம் அலப்பறைகள் சமீபகாலமாக கூடிக் கொண்டேதான் வருகிறது, இது அமைச்சரவையும் விட்டுவைக்கவில்லை அப்படி ஒரு சம்பவம் தான் பிரேசிலில் நடந்துள்ளது.

பிரேசில் அதிபர் அமைச்சர்களுடன் நடத்திய வீடியோ கான்ஃபரன்ஸில் ஒருவர் முழு நிர்வாணமாக குளித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது  

உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா காரணமாக ஒரு சில நாடுகள் அமைச்சரவையில் எடுக்கும் முடிவுகளை கூட வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் எடுக்கின்றனர். இதேபோல் அடுத்தக்கட்ட ஊரடங்கிற்காக பிரேசில் அதிபர்  ஜெய்ர் போல்சனாரோ உட்பட 10 அமைச்சர்களை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை செய்ய அழைத்துள்ளார்.

வீடியோ கான்ஃபரன்ஸ் முடிந்தபிறகு, அடுத்தகட்டமாக சாவோ பாலோ மாநிலத்தின் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவரான பாலோ ஸ்காஃப், பிரேசிலில் ஊரடங்கு தாக்கம் குறித்து விவாதிக்க அதிபர் போல்சொனாரோ மற்றும் பிற முக்கிய நபர்களுடன் வீடியோ காலில் இணைந்துள்ளார்

அந்த வீடியோ கான்ஃபரன்ஸில் ஆலோசனையில் இருந்த ஒருவர் வீடியோ கால் ஆப் செய்ததாக நினைத்து குளிக்க தொடங்கியுள்ளார். அவர் குளிக்கும் காட்சி வீடியோ திரையில் தெரிய வந்துள்ளது. இதை கவனித்து அதிர்ச்சியடைந்த அதிபர், ஆலோசனையின் போது குறுக்கிட்டு கடைசி திரையில் இருக்கும் உங்களது சக ஊழியர் சரியாக இருக்கிறரா என்று பாலோவிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

அப்போது தான் பாலோ நிர்வணமாக குளிக்கும் அவரை  கவனித்துள்ளார். ஆலோசனை முடிந்தது என நினைத்து கேமிராவை ஆஃப் செய்யாமல் இருந்துள்ளார் என்பது பின்னர் தெரியவந்துள்ளது. இந்த வீடியோவின் ஸ்க்ரீன்ஷாட் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்