"வாழ்க்கையில இப்படி ஒரு தன்னம்பிக்கை வேணும்".. சிறுவனின் அசர வைக்கும் பாடல்.. அமைச்சர் பகிர்ந்த Cute வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பள்ளி சிறுவன் ஒருவன் பாடல் பாடும் வீடியோவை நாகலாந்து அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "தைரியமா இருங்க".. தாய் மரணமடைந்த நிலையில் வடிவேலுவிற்கு ஆறுதல் கூறிய முதல்வர்..!

நாகாலாந்தை சேர்ந்த எம்பியான டெம்ஜென் இம்னா அலோங் தனது பகடியான ட்வீட்களுக்கு பெயர்போனவர். நாகலாந்து உயர் கல்வித்துறை மற்றும் பழங்குடி மேம்பாட்டு துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார் டெம்ஜென் இம்னா அலோங். சமூக விஷயங்கள் குறித்தும் தன்னம்பிக்கை அளிக்கும் விஷயங்கள் பற்றியும் நகைச்சுவையுடன் இவர் ட்வீட் செய்வது வழக்கம். இதனாலேயே இவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் அண்மையில் பகிர்ந்த வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்த வீடியோவில் பள்ளி சிறுவன் ஒருவன் உரத்த குரலில் பாடலை பாட அங்கு அமர்ந்திருக்கும் சிறுவர் சிறுமியர் புன்னகை செய்கின்றனர். இருப்பினும், அந்த சிறுவன் தொடர்ந்து தன்னுடைய பாடலை பாடுகிறான். இந்நிலையில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ள டெம்ஜென் இம்னா அலோங் ,"வாழ்வில் இதுபோன்ற தன்னம்பிக்கை வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

43 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருவதுடன் நெட்டிசன்கள் சிறுவனையும் பாராட்டி வருகின்றனர். இதுவரையில் இந்த வீடியோவை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். "இது அருமையான வீடியோ. இந்த சிறுவன் நேபாளி பாடலைப் பாடுகிறான். மாமியார் வீட்டிற்குச் செல்வதைப் பற்றியும் மேலும் நல்ல உணவு மற்றும் பானங்கள் சாப்பிட வேண்டும் என்றும் அந்த பாடல் அமைந்திருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவில் மற்றொரு பயனர், "அவரது நம்பிக்கை மற்றும் அவர் அதைச் செய்யும் எளிமை எனக்குப் பிடித்திருக்கிறது. உலகத்தை தங்கள் விருப்பப்படி அமைத்துக்கொள்ள நம் குழந்தைகள் அனைவர்க்கும் இந்த நம்பிக்கை தேவை" எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர்,"இந்த சிறுவனுக்கு பாராட்டுக்கள். அவர் எனக்கு பாடம் கற்பித்திருக்கிறார். நம்பிக்கை என்பது பயம் இல்லாதது அல்ல, ஆனால் அதை எதிர்கொண்டு அதைத் உடைக்கும் திறன். உங்களையும் உங்கள் திறன்களையும் நம்புங்கள்" என குறிப்பிட்டுள்ளார். 

Also Read | படிச்சது MA .. பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலை.. எல்லாத்தையும் உதறித் தள்ளிவிட்டு ரோட்டுக்கடை தொடங்கிய பெண்.. நெகிழ வைக்கும் காரணம்!

NAGALAND MINISTER, BOY, SING, SCHOOL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்