"பாக்க பாம்பு மாதிரியே இருந்துச்சு, ஆனா".. மர்ம உயிரினத்தை பார்த்து உறைந்து போன நெட்டிசன்கள்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வினோதமான ஒரு உயிரினம் தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில், பார்ப்போர் பலரையும் இந்த விஷயம், ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "27 வருசமா யாரையும் நெருங்க விடல".. அமேசான் பழங்குடி இனத்தின் கடைசி மனுஷன்.. தற்போது வெளியான அதிர்ச்சி தகவல்!!

இங்கிலாந்தின் Merseyside என்னும் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், உடல் முழுவதும் பார்ப்பதற்கு பாம்பு போல இருக்கும் உயிரினம் ஒன்றின் புகைப்படத்தை எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அந்த நபர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே இந்த புகைப்படம் அதிகம் வைரலாகி, பலரை குழப்பத்திலும் அதே வேளையில் அச்சத்திலும் உறைய வைத்திருந்தது.

அந்த உயிரினத்தின் தோல் மற்றும் உடல் அமைப்பு பார்ப்பதற்கு பாம்பு போல இருந்தாலும், அதன் நீளம் மற்றும் அளவு சற்று குறைவாகவே இருந்தது. இந்த மர்ம உயிரினம் பற்றி நெட்டிசன்கள் பலரும் பல வித கேள்விகளை எழுப்பி இருந்தனர். மேலும் இந்த புகைப்படத்தை பகிர்ந்த நபர், "யாராவது இது என்ன உயிரினம் என்பதை அடையாளம் கண்டு கொண்டீர்களா?. பாம்பு தாக்குவதை போலவே அது தலையை எடுத்து உயர்த்தியது" என்ற கேள்வியையும் எழுப்பி இருந்தார்.

இது பாம்பா அல்லது வேறு ஏதாவது உயிரினமா என மக்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், வல்லுனர்களான சிலர், அது பாம்பு போன்ற உயிரினம் கிடையாது என்றும், அது ஒரு வகை கம்பளிப்பூச்சி என தெரிவித்துள்ளனர். Chester Zoo-வின் விலங்கு மற்றும் தாவர இயக்குனர் மைக் ஜோர்டன் இது பற்றி பேசுகையில், "அது Elephant Hawkmoth எனப்படும் ஒரு வகை பூச்சி ஆகும். Willowherb மற்றும் Fuchsias போன்ற தாவரங்களில் இவை இருப்பதால், தோட்டங்களிலும் அதிகம் காணப்படும். மேலும், இவை தாங்கள் தொந்தரவு செய்யப்படுவது போல உணர்ந்ததும் தலையின் பின்னால் உள்ள பகுதிகளை தூக்கி, ஒரு பாம்பை போல தன்னை பிரதிபலிக்கும்" என தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில், பாம்பு போல ஒரு மர்ம உயிரினம் என நெட்டிசன்கள் குழம்பி போன நிலையில், அது ஒரு கம்பிளிப்பூச்சி என்பதை வல்லுநர் ஒருவர் காரணங்களுடன் நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | எதே கல்யாண பந்தியில் கலவரமா.. இளைஞரின் திருமணத்தில் நண்பர்கள் வச்ச கட் அவுட்.. அந்த பலகாரம் மேட்டர் இருக்கே.. !

MYSTERY CREATURE, SNAKE, ENGLAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்