மனிதர்களுக்கு புதிய தலைவலி?.. பரவத் துவங்கிய 'ஜாம்பி' நோய்?... மருத்துவர்கள் சொல்லிய அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கனடாவில் மான்களுக்கு ஜாம்பி நோய் தாக்கி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இது மனிதர்களுக்கும் பரவலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது பலரையும் அதிரவைத்து உள்ளது.
ஜாம்பி நோய்
மான்களில் பரவிவரும் இந்த ஜாம்பி நோய் அவற்றின் உமிழ்நீர், சிறுநீர் ஆகியவற்றை தொடர்ந்து சுரக்க வைக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். Chronic Wasting Disease (CWD) என்று சொல்லப்படக்கூடிய இந்நோய், மூளையின் ப்ரியான் என்னும் புரத அமைப்பை பாதிக்கக்கூடியது. இதனை zombie deer disease என்றும் அழைக்கிறார்கள்.
இந்த நோயால் தாக்கப்படும் மான்களின் உடல்மொழியில் மாற்றம் ஏற்படும் எனவும் இதனால் மான்கள் மரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், கனடாவின் ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் போன்ற பகுதிகளில் உள்ள மான்களை இந்த நோய் பாதித்து வருகிறது. இதனால் பல மான்கள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மரை மான், கலை மான், சதுப்புநில மான், கட மான் போன்ற பல்வேறு வகையான மான்களையும் இந்த நோய் தாக்கலாம் என தெரிவித்திருக்கிறார்கள் உயிரியல் ஆய்வாளர்கள்.
அமெரிக்காவில்
தற்போது மான்களிடையே பரவிவரும் இந்த ஜாம்பி நோய் முதன் முறையாக 1960 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவின் கொலராடோ, ஓக்லஹோமா, கன்சாஸ், நெப்ராஸ்கா, மினசோட்டா, விஸ்கான்சின், தெற்கு டகோட்டா மற்றும் மொன்டானா ஆகிய இடங்களில் பரவியது. அதன் பிறகு 1996 ஆம் ஆண்டில் கனடாவின் சஸ்காட்செவன் பகுதியில் உள்ள மான் பண்ணைகளில் இந்த நோய் பரவியதாக கூறப்படுகிறது.
மனிதர்களை தாக்குமா?
இந்த நோய் இதுவரையில் மனிதர்களை தாக்கியதில்லை எனக்கூறும் ஆய்வாளர்கள் ஆனால் மனிதர்களை தாக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரித்து உள்ளனர். மான்களின் ரத்தம் மூலமாக மனிதர்களுக்கு பரவலாம் என்பதே ஆராய்ச்சியாளர்களின் வாதம்.
இருப்பினும் மான்களை வேட்டையாடுவது, நோயுற்ற மான்களை உணவாக உட்கொள்வது, மான்களின் தோல் பொருட்களை கையாள்வது ஆகியவற்றை தவிர்க்குமாறு மனிதர்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
ஏற்கனவே கொரோனா வைரஸ் கிருமி தாக்குதல் மனித சமுதாயத்தை பாடாய்படுத்திவரும் நிலையில், தற்போது கனடாவில் ஜாம்பி நோய் அங்குள்ள மான்களுக்கு பரவி வருவதாக வெளியான செய்தி பலரையும் திடுக்கிட வைத்து உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பெரும் சோகம்! 5 இந்திய மாணவர்கள் மரணம்.. கனடா இந்திய தூதர் வெளியிட்ட செய்தி..! நடந்தது என்ன?
- கரெக்ட்டா 4.30 மணிக்கு ஒரு கனவு கண்டேன்.. காலையில எந்திரிச்சு மெயில் செக் பண்ணினப்போ.. காத்திருந்த இன்ப அதிர்ச்சி
- ‘இடியட்ஸ்…!’- ‘குடிமக்களை’ வகைதொகை இல்லாமல் திட்டித் தீர்த்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ; என்ன காரணம்?
- 'எங்க நாட்டுல' வந்து வாழ விருப்பமா...? அடுத்த வருஷத்துக்குள்ள '4,11,000' பேருக்கு 'சிட்டிசன்ஷிப்' கொடுக்க போறோம்...! - 'அதிரடி' அறிவிப்பை வெளியிட்ட நாடு...!
- VIDEO: அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து நடந்த 'ஓர்பால் ஈர்ப்பு' திருமணம்...! - தமிழ் முறைப்படி 'தாலிகட்டி' கொண்டாட்டம்...! - கொந்தளித்த நெட்டிசன்கள...!
- 'வெளிய தல காட்ட முடியல'!.. தேர்தல் பிரச்சாரத்தில்... கல் அடி பட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!.. கொந்தளிக்கும் கனடா மக்கள்!
- 'ஆளுக்கு 2 சூட்கேஸ தூக்கிட்டு... தெறித்து ஓடும் 3 வெளிநாட்டவர்கள்'!.. 'கண்டிப்பா நீங்க நினைக்கிறது அதுல இல்ல'!.. பகீர் பின்னணி!
- சுற்றி வளைத்த தாலிபான்கள்!.. தப்புவதற்காக அசுர வேகத்தில் பறந்த ஆப்கான் விமானப்படை!.. கண்ண மூடி தொறந்து பார்த்தா... 'அய்யோ'!
- 'இன்னும் கொஞ்ச நேரத்துல பாம் வெடிச்சிடும்'!.. 'இறுதி நொடியில் கனடா எடுத்த அவசர முடிவு'!.. இனி காபூலில் 'அவங்க' நிலைமை அவ்ளோ தான்!!
- 'தடுப்பூசி விவரங்கள பாஸ்போர்ட்ல ஏன் சேர்க்கணும்?.. உள்ளடி அரசியலா'?.. போராட்டத்தில் குதித்த மக்கள்!.. திடுக்கிடும் பின்னணி!