யாரும் நிக்காதீங்க, வேகமா ஓடுங்க...! ரயிலில் கேட்ட மரண ஓலம்...! யார் இந்த 'ஜோக்கர்' மனிதன்...? - கெடைக்குற 'கேப்'ல புகுந்து தெறித்து ஓடிய மக்கள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜப்பானில் ரயிலில் இருந்த மர்மநபர் ஒருவர் அங்குள்ள பயணிகளை சராமரியாக குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

யாரும் நிக்காதீங்க, வேகமா ஓடுங்க...! ரயிலில் கேட்ட மரண ஓலம்...! யார் இந்த 'ஜோக்கர்' மனிதன்...? - கெடைக்குற 'கேப்'ல புகுந்து தெறித்து ஓடிய மக்கள்...!
Advertising
>
Advertising

ஜப்பனில் கடந்த சில ஆண்டுகளாக கத்தி குத்து சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஓடும் ரயிலில் மர்ம நபர் ஒருவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mysterious person train in Japan stabbed a no of passengers

நேற்று மாலை டோக்கியோவில் இருந்து புறப்பட்ட ஒரு மின்சார ரயில் கோகுரியோ ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது  அப்போது அந்த ரயிலில் ஜோக்கர் உடை அணிந்த மர்ம நபர் ஒருவரும் பயணம் செய்துள்ளார்.

ஜோக்கர் உடை அணிந்த அந்த மர்ம நபர் திடீரென ரயிலில் தன்னுடன் பயணம் செய்த பயணிகளை கத்தியால் குத்த தொடங்கி, கையில் இருந்த துப்பாக்கியை வைத்தும் சுட ஆரம்பித்துள்ளார்.

பயணிகளின் கூச்சல் காரணமாக உடனடியாக மின்சார ரயில் உடனடியாக நிறுத்தப்பட்ட நிலையில், ரயிலில் இருந்து பயணிகள் உயிருக்கு பயந்து அங்குமிங்கும் ஆர்ப்பரித்து ஓடினர். அந்த நேரத்தில் சினிமாவில் வருவது போல அந்த மர்மநபர் காலியான ரயிலில் அமர்ந்த படி பயணிகளை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டு கொண்டிருந்துள்ளார்.

இந்த கொடூர சம்பவத்தில் படுகாயம் அடைந்த 17 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரயில் நிலையத்தை முழுமையாக சுற்றி வளைத்த மர்ம நபரை கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

TRAIN, JAPAN, STABBED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்