திடீர்னு வானத்துல தோன்றிய சுழல் வடிவம்.. "ஒருவேளை ஏலியன்களின் பாதையா இருக்குமோ?" குழம்பிப்போன மக்கள்.. விஞ்ஞானிகள் சொல்லிய வியக்கவைக்கும் காரணம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நியூசிலாந்து நாட்டில் நேற்று இரவு வானில் வித்தியாசமான சுழல் வடிவம் தோன்றியிருக்கிறது. இது மக்களிடையே பல்வேறு குழப்பங்களை உருவாக்கிய நிலையில் இந்த வடிவத்திற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | என்ன இப்படி கிளம்பிட்டாங்க..ஊழியர் கொடுத்த வித்தியாசமான ராஜினாமா கடிதம்.."சீரியஸான பிரச்சனை இது" எச்சரிக்கும் தொழிலதிபர்..!

வானத்தை கவனி

நேற்று இரவு நியூசிலாந்தின் ஸ்டீவர்ட் தீவில் விண்வெளி ஆய்வாளராக பணிபுரிந்துவரும் அலஸ்டயர் பர்ன்ஸ் என்பவருக்கு அவரது நண்பர் மெசேஜ் செய்திருக்கிறார். அதில்,"உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தை கவனி" என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் குழப்பமடைந்த பர்ன்ஸ் வானத்தை பார்த்த போதுதான் அந்த வடிவத்தை பார்த்திருக்கிறார். வானத்தில் சுழல் போன்ற வடிவம் பிரகாசமாக தெரியவே உடனடியாக தனது போனில் புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார் பர்ன்ஸ். அடுத்த சில மணி நேரங்களில் தெற்கு நியூசிலாந்து மக்கள் அனைவரும் இதனால் பதற்றமடைந்திருக்கின்றனர்.

அச்சம்

வானில் தோன்றிய வித்தியாசமான சுழல் வடிவம் குறித்து பொதுமக்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட துவங்கினர். ஒருதரப்பினர் "இது ஏலியன்கள் பூமிக்குள் நுழையும் பாதையாக இது இருக்கலாம்" என்றும் சிலர் "இது வேறு கேலக்சியின் தோற்றம்" எனவும் தங்களது கற்பனை கலந்த தகவல்களை தெரிவிக்கவே பொதுமக்களிடையே இந்த திடீர் சுழல் குறித்த அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

இருப்பினும் ஆக்லாந்து பல்கலைக்கழகத்தின் இயற்பியலாளர், பேராசிரியர் ரிச்சர்ட் ஈஸ்டர் இதுபற்றி பேசுகையில்," இந்த வடிவம் வினோதமாக இருந்தாலும், இது எப்படி உருவானது என்பதை எளிதாக விளக்கிவிடலாம். இதனால் மக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸ்

உலகத்தின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் நிர்வகித்து வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா உடன் இணைந்து பல்வேறு திட்டங்களில் பணியாற்றிவரும் ஸ்பேஸ் எக்ஸ், உலகம் முழுவதும் மலிவான விலையில் அதிவேக இணைய சேவையை அளிக்க ஸ்டார்லிங் எனும் திட்டத்தை துவங்கியுள்ளது.

இத்திட்டத்தின்படி, 2000 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பும் பணியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை குளோபல்ஸ்டார் DM15 செயற்கைக்கோள்களை Falcon 9 என்னும் ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். இந்த ராக்கெட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட payload விண்ணில் சுழன்றதால் நீராவியால் ஆன, சூழலை தோற்றுவித்திருக்கிறது. இது சூரிய ஒளியில் பிரதிபலித்து வித்தியாசமான சுழல் வடிவம் தோன்றியிருக்கிறது.

நியூசிலாந்து நாட்டில் வானில் வித்தியாசமான சுழல் வடிவம் தோன்றியதால், மக்கள் அச்சப்பட்ட நிலையில் ஆராய்ச்சியாளர்கள் இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட்டால் உருவான இயற்கையான தோற்றம் என்று விளக்கமளித்துள்ளது மக்களிடையே ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | அட்ராசக்க..6 லட்சத்துக்கும் 10ரூ காயின் கொடுத்து கார் வாங்கிய தமிழக இளைஞர்.. அதுக்கு அவர் சொன்ன காரணம் தான் செம்ம..!

NIGHT SKY, GLOWING SWIRL LIGHTS UP, SPACE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்