'வானில் இருந்து வந்து விழுந்த தீப்பந்து?'.. ‘90 பேர் வரை பார்த்த அபூர்வ நிகழ்வா?’.. பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜெர்மனியில் வானில் இருந்து தீப்பந்து ஒன்று விழுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் வானம் 7 வினாடிகள்  இரவில் திடீரென பளிச்சென ஒளிர்ந்தது. அத்துடன், வானில் இருந்து  தீப்பந்து ஒன்று வந்து விழுந்துள்ளது. 5 முதல் 7 வினாடிகளுக்கு அந்த பளிச்சென்ற ஒளிக்கீற்று ஒளிர்ந்து பின்னர் படிகப்பச்சை நிறத்திற்கு மாறி இரண்டாகப் பிரிந்து முடிவடைந்துள்ளது.

இதனை ஜெர்மன் வானியல் நிலையமும், பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும்,  உறுதி செய்ததுடன் ஜெர்மன் வானியல் நிலையத்தை சேர்ந்த நிபுணர் Dieter Heinlein இது ஒரு விண்கல்லின் துண்டாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

நடந்த சில மணி நேரத்திலேயே, 90 பேர் வரை இந்த அபூர்வமான நிகழ்வை பார்த்ததாக, தங்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் Jurgen Oberst குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உள்ளூர் ஊடகம் ஒன்று, அந்த விண்கல் ரைன் நதிக்கு மேல் பாய்ந்து செல்லும் இந்த நிகழ்வு, வாகனமொன்றில் பொருத்தப்பட்ட டேஸ் கேம் கேமராவில் பதிவானதை அடுத்து இதை வீடியோவாக வெளியிட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்