உலகத்துல எல்லாம் அழிஞ்சு போனாலும் இந்த வால்ட்-க்கு ஒண்ணுமே ஆகாது.. பாத்து பாத்து கட்டிருக்காங்க.. அப்படி இதுக்குள்ள என்ன தான் இருக்கு.?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பூமியின் வட துருவத்தில் இருக்கிறது இந்த பதுங்கு குழி. கிட்டத்தட்ட குளிர் பாலைவனமாக இருக்கும் இந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த வால்ட் தான் மனித வாழ்க்கையின் மிகப்பெரிய நம்பிக்கையாக திகழ்கிறது.

Advertising
>
Advertising

Also Read | அமெரிக்காவின் பாதுகாக்கப்பட்ட இடத்துக்குள்ள நுழைஞ்ச ட்ரக்.. டாப் லெவல் அதிகாரி எல்லாரும் கூடிட்டாங்க.. டிரைவர் சொன்னதை கேட்டு கடுப்பான காவல்துறை.!

ஆங்கிலத்தில் doomsday என்ற பதம் ஒன்று உண்டு. அதாவது உலகம் மிகப்பெரிய அழிவை சந்திக்கும் நாளை doomsday என்கிறார்கள். அப்படியான ஒரு மோசமான நாளுக்கு பிறகும் மனிதர்களை உயிர் வாழவைக்கவே இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. புயல், பூகம்பம், காட்டுத்தீ என இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும் இந்த கட்டிடத்துக்கு ஏதும் ஆகாது. ஏனென்றால் இதையெல்லாம் கணித்தே இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

வால்ட்

வட துருவத்திலிருந்து 500 மைல் தொலைவில் உள்ள ஸ்வால்பார்ட் தீவுகளில் அமைந்துள்ளது இந்த வால்ட். இதற்குள் உலகின் இருக்கக்கூடிய அனைத்து பயர்களின் விதைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒருவேளை உலகில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டு, பயிர்கள் அழிந்துபோனாலும் இங்கிருக்கும் விதைகளை கொண்டு மீண்டும் உணவு உற்பத்தியை துவங்கலாம். இந்த இடம் அமைந்துள்ள தீவுகளில் 15 சதவீதம் மட்டுமே தாவரங்கள் வளர்கின்றன. கிட்டத்தட்ட முழுவதும் பனியால் சூழப்பட்ட தீவு இது.

கலபகோஸ் காட்டு தக்காளி முதல் பூர்வீக அமெரிக்க பழங்குடியினரால் பயிரிடப்படும் பூசணிக்காய்கள் வரை இந்த பதுங்கு குழிக்குள் விதைகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த பதுங்கு குழிக்குள் மக்களுக்கு அனுமதி கிடையாது. இதனுள் விதைகள் மூன்று அடுக்கு ஃபாயில் பேக்கேஜிங்கில் வைக்கப்பட்டு பெட்டிகளில் சேமிக்கப்படும். இந்த வால்ட்டின் உள்ளே -18C வெப்பநிலையில் விதைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அசாதாரண வானிலை

நார்வேயின் வடக்கு முனை மற்றும் ஆர்க்டிக்கிற்கு இடையில் இந்த வால்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. கடுமையான குளிர், கணிக்க முடியாத வானிலை ஆகியவற்றுக்கு மத்தியிலும் இந்த தீவில் 2,500 பேர் வசித்து வருகின்றனர். 2014 ஆம் ஆண்டில் மேலும் 10,000 விதைகள் இங்கே வைக்கப்பட்டன. மொத்தமாக இந்த பதுங்கு குழியில் 1.1 மில்லியன் வகையான விதைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சில தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இதுனுள் இருக்கும் விதைகள் பயன்பாட்டுக்காக வெளியே எடுக்கப்படும். அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு உள்நாட்டு போரினால் கடுமையான சேதங்களை எதிர்கொண்ட சிரியா நாட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட விதைகள் அந்நாட்டுக்கு திரும்பி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read | "பத்தே நிமிஷம் தான்".. யாரும் பாக்கலைன்னு பார்சலை திருடிய ஆசாமி.. உரிமையாளர் அனுப்பிய மெசேஜை பாத்துட்டு வெலவெலத்துப்போன திருடன்..

NORTH POLE, DOOMSDAY, DOOMSDAY VAULT, HUMAN EXTINCTION

மற்ற செய்திகள்