"இது என்ன உயிரினம்னே தெர்ல..இப்படி ஒன்ன யாரும் பாத்திருக்கக்கூட மாட்டாங்க".. பீச்ல வாக்கிங் போன பெண்ணுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்..
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவில் வித்தியாசமான உயிரினம் ஒன்று கடலில் இருந்து கரை ஒதுங்கியிருக்கிறது. அந்த உயிரினத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
கடல்
ஆதிகாலம் தொட்டே மனிதர்களுக்கு பல்வேறு விதத்தில் ஆச்சர்யமாக விளங்கிவருகிறது கடல். உலகத்தின் பல நாடுகளும் கடல்வழி பயணத்தின் மூலமாகவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டும் அல்லாமல் கடல் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களுக்கு தாயகமாக விளங்குகிறது. உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் கடலே இருந்தாலும் அதுகுறித்த ஆராய்ச்சிகள் இன்னும் முழுமையடையவில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒவ்வொரு நாளும் கடல் பற்றிய புதுப்புது தகவல்கள் வெளிவந்து உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றன.
வித்தியாசமான உயிரினம்
அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் வித்தியாசமான உயிரினம் ஒன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. அந்த கடற்கரைக்கு எப்போதும் விக்கி ஹேன்சன் வாக்கிங் செல்வது வாடிக்கை. அப்படி கடந்த வார சனிக்கிழமை தனது செல்ல நாயுடன் பீச்சுக்கு சென்றிருக்கிறார் அவர். அப்போது தூரத்தில் நீளமாக ஏதோவொன்று கிடப்பதை பார்த்த அவர் ஆர்வத்துடன் அதன் அருகே சென்றுள்ளார். அப்போது தான் அவருக்கு அதிர்ச்சி கலந்த வியப்பு ஏற்பட்டிருக்கிறது.
இப்படி ஒன்ன பார்த்ததே இல்ல
இதுபற்றி பேசிய அவர்,"மணலில் நீளமாக கிடந்த அந்த உயிரினத்தின் மீது பல வண்ண கலவைகளால் ஆன, இறக்கைகள் போன்ற அமைப்பு இருந்தது. அவை அசைந்து கொண்டிருந்தன. அந்த உயிரினத்தின் இன்னொரு பாதி கடலிலேயே துண்டிக்கப்பட்டு இருக்கலாம் என எண்ணினேன். நான் இதுபோன்ற ஒன்றை பார்த்ததில்லை. யாரும் இப்படி ஒரு விநோதத்தை பார்த்திருப்பார்களா என்றும் தெரியவில்லை" என்றார்.
அதன்பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் அதே பகுதிக்கு விக்கி சென்றிருக்கிறார். அப்போது எந்த அசைவுகளும் இன்றி அந்த உயிரினம் கிடந்திருக்கிறது. ஆகவே அது உயிரிழந்திருக்கலாம் என கருதியதாக கூறியுள்ளார் விக்கி. இதனிடையே இந்த வினோத உயிரினத்தின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பரவி பல்வேறு வகையான விவாதங்களை எழுப்பியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 73 வருசமா நீடிச்ச 'மர்மம்'.. "இறந்து போனவரு பெயரே இப்ப தான் தெரிய வந்துருக்கு.." பரபரப்பு பின்னணி
- "என் பொண்டாட்டி கடல்ல விழுந்துட்டா".. துடிச்சுப்போன கணவன்..மொத்த படையையும் இறக்கிய போலீஸ்.. 2 நாளுக்கு அப்பறம் ஏற்பட்ட டிவிஸ்ட்..!
- மீனவர்கள் வலையில் சிக்கிய திமிங்கல வாந்தி.. "அம்மாடியோவ், இத்தனை கோடி ரூபா மதிப்பா இதுக்கு??.."
- Pacific பெருங்கடலில் நிகழ்ந்த ஆச்சரியம்.. "2900 அடிக்கு கீழ ஆய்வு செஞ்சதுல.." போட்டோ'வ பாத்து மிரண்டு போன நெட்டிசன்ஸ்
- 100 வருசத்துக்கு முன்னாடி மூழ்கிய கப்பலில் ‘தங்கப்புதையல்’.. இதோட மதிப்பு இத்தனை கோடியா..? மிரண்டு போன ஆய்வாளர்கள்..!
- ஆத்தாடி எம்மாம்பெருசு.. வலையில் சிக்கிய 100 வயதான ராட்சத லாப்ஸ்டர்..வைரலாகும் வீடியோ..!
- பசிபிக் கடலில் தனக்கு தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்.. அதுக்கு அவங்க சொன்ன காரணத்தை கேட்டு திகைச்சுப்போன நெட்டிசன்கள்..!
- 100 வருஷத்துக்கு முன்னாடி மூழ்கிப்போன கப்பலில் இருக்கும் பொக்கிஷம்.. கப்பலை நெருங்கவிடாத கடல் மான்ஸ்டர்? கடைசியா உள்ள இருந்ததை கண்டுபிடிச்ச நபர்..!
- “காப்பாத்துங்க.. காப்பாத்துங்க..” சூறாவளி காற்றடித்து நடுக்கடலில் மூழ்கிய படகு.. தூத்துக்குடியில் பரபரப்பு..!
- முன்னாடி டிராகன் மீன்.. இப்போ இதுவா..? நெட்டிசன்களை நடுங்க வச்ச வினோத மீன்.. வைரலாகும் புகைப்படம்..!