மகளுக்கு அம்மா கொடுத்த சாதாரண ஜாடி.. ஏலத்துல நடந்ததை பார்த்துட்டு அதிகாரிகளே ஷாக் ஆகிட்டாங்க.. இதையா இவ்வளவு நாளா வீட்ல சும்மா வச்சிருந்தீங்க..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரான்சில் சாதாரண ஜாடி ஒன்று மிக அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனையாகி உள்ளது. இது ஏலத்தை நடத்திய அதிகாரிகளையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "தம்பி கோட்டுக்கு உள்ள வாங்க.. செஞ்சிட போறேன்".. SA வீரருக்கு சஹார் கொடுத்த வார்னிங்.. சேட்டையான வீடியோ..!

சீன ஜாடி

பிரான்ஸை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு அவருடைய தாய் இந்த சீன ஜாடியை பரிசாக கொடுத்திருக்கிறார். வெகுநாட்களாக வீட்டில் இருந்த இந்த ஜாடியை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறார் அந்த மகள். இதனையடுத்து பிரான்சில் உள்ள Osenat எனும் ஏல நிறுவனம் மூலமாக இந்த ஜாடியை விற்பனை செய்ய நினைத்திருக்கிறார் அவர். இந்த ஜாடியை ஆராய்ந்த ஏல நிறுவனத்தின் அதிகாரிகள் இது 20 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட சாதாரண ஜாடி தான் என்றும், ஒருவேளை இது 18 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டதாக இருந்திருந்தால் அதன் மதிப்பு அதிகமாக இருந்திருக்கும் எனவும் அந்த பெண்மணியிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

திட்டமிட்டபடி ஜாடி ஏலத்திற்கு வந்திருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் தரும் வகையில் பலரும் போட்டிபோட்டுக்கொண்டு ஏலத்தில் விலையை ஏற்றியிருக்கிறார்கள். இதனால் அந்த ஏல நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகளே அதிர்ந்து போயிருக்கின்றனர். 54 செமீ உயரம் கொண்ட இந்த ஜாடியை வாங்க 30 பேரிடையே கடும் போட்டி நிலவியதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இறுதியாக சீனாவை சேர்ந்த ஒருவர் இந்த ஜாடியை 7.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியிருக்கிறார். இருப்பினும் அவரது பெயரை ஏல நிறுவனம் வெளியிடவில்லை.

ஏலம்

பாரீஸை சேர்ந்த பழங்கால பொருட்களை வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார் பெண்மணியின் தாயார். ஆனால், இந்த ஜாடி 2000 அமெரிக்க டாலர்களுக்கு விலைபோகும் என அதிகாரிகள் சொல்லிய நிலையில், சுமார் 4000 மடங்கு அதிகமான தொகைக்கு விற்பனையானது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏல நிறுவனத்தின் இயக்குனர் செட்ரிக் லேபோர்டே இதுபற்றி பேசுகையில்," இந்த ஜாடி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே பலரும் இதனை பார்வையிட விரும்பியதை நாங்கள் கண்டோம். ஆனால், இந்த ஜாடி அவ்வளவு மதிப்புடையது அல்ல என எங்களது நிபுணர் குழு கருதியது. சீனர்கள் தங்கள் வரலாற்றில் ஆர்வமாக உள்ளனர். மேலும் அவர்களின் வரலாற்றைக் கைப்பற்றுவதில் பெருமிதம் கொள்கிறார்கள்" என்றார்.

Also Read | அது எங்கள ஒன்னும் செய்யாது.. வீட்டுக்குள்ள பாம்புக்கு கோவில்.. மிரள வைக்கும் குடும்பம்.. ரொம்ப வருஷமாவே இப்படித்தானாம்..!

BIDDING WAR, ORDINARY CHINESE VASE, AUCTION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்