நடுவானில் பறந்த விமானம்.. திடீர்ன்னு உள்ள பாய்ஞ்ச துப்பாக்கி குண்டு.. "ஆனா சுட்டது உள்ள இருந்தவங்க இல்ல".. பீதி கிளப்பிய பின்னணி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம் கடும் பரபரப்பையும், இதற்கு பின்னால் உள்ள காரணம் இன்னும் அதிர்ச்சியையும் உண்டு பண்ணி உள்ளது.

நடுவானில் பறந்த விமானம்.. திடீர்ன்னு உள்ள பாய்ஞ்ச துப்பாக்கி குண்டு.. "ஆனா சுட்டது உள்ள இருந்தவங்க இல்ல".. பீதி கிளப்பிய பின்னணி!!
Advertising
>
Advertising

மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம், வழக்கம் போல பயணிகளை ஏற்றிக் கொண்டு மியான்மர் வான்வெளியில் பறந்து கொண்டு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல, விமானம் தரையிறங்க வேண்டிய விமான நிலையத்திலிருந்து சுமார் 4 மைல் தொலைவில் விமானம் வந்து கொண்டிருந்துள்ளது.

3500 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், திடீரென யாரும் எதிர்பாராத ஒரு அசம்பாவித சம்பவம் விமானத்தில் அரங்கேறி உள்ளது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகளில் ஒருவர் மீது திடீரென துப்பாக்கி குண்டு ஒன்று தாக்கி உள்ளது. நடுவானில் வைத்து திடீரென இந்த சம்பவம் நடந்ததால் கடும் பரபரப்பு நிலவியது.

ஆரம்பத்தில், விமானத்தில் இருந்த பயணிகள் யாராவது துப்பாக்கியை மறைத்து வைத்து துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டாரா என்று தான் சோதித்துப் பார்த்துள்ளனர். ஆனால் அந்த சோதனையில் அப்படி ஏதும் நடக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் விமானத்தை சோதனை செய்து பார்த்த போது தான் அந்த துப்பாக்கி குண்டு தரையில் இருந்து சுடப்பட்ட துப்பாக்கியில் இருந்து வந்தது என்பதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், விமானத்தை துளைத்துக் கொண்டு அந்த குண்டு பயணியை தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக விமானம் தரையிறங்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால், உடனடியாக விமானம் தரை இறக்கப்பட்டு, அந்த நபருக்கு சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மியான்மரில் கடந்த ஆண்டு ராணுவ புரட்சி ஏற்பட்டு தற்போது ராணுவத்தினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளது. இதன் காரணமாக, அந்நாட்டில் அவ்வப்போது தாக்குதல் நடப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும் அந்நாட்டு ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

காரணம் எதுவாக இருந்தாலும், கீழே இருந்து பாய்ந்து வந்த துப்பாக்கி குண்டு விமானத்தில் இருந்த பயணியை தாக்கிய சம்பவம், அந்நாட்டு மக்களிடையே கடும் பீதியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

MYANMAR, FLIGHT, GUN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்