ஆங் சான் சூகி மீது ஊழல் குற்றச்சாட்டு.. நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டனை? வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மியான்மர்: மியான்மரில் மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அந்நாட்டு ராணுவமே கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய சம்பவம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

மியான்மர் ஆசியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் நாடு. இங்கு மக்களால் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 76 வயதான ஆங் சான் சூகி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது முறைகேடு நடத்தி தேர்தலில் வென்றதாக குற்றம்சாட்டிய ராணுவம், மியான்மர் தலைவரான ஆங் சான் சூகி உள்ளிட்ட பலரை வீட்டு காவலில் அடைத்தது. அதுமட்டுமில்லாமல் ஆங் சான் சூகி மீது, அலுவல் ரீதியான ரகசிய சட்டங்களை மீறுதல் மற்றும் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

15 ஆண்டுகள் சிறைத்தண்டனை:

இதுவரை, ஆங் சான் சூகிக்கு எதிராக 11-வது ஊழல் குற்றச்சாட்டை மியான்மர் காவல்துறை பதிவு செய்துள்ளது. அதோடு, லஞ்சம் பெற்றதாக சூகி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டநிலையில் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் மியான்மரின் குளோபல் நியூ லைட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

6 ஆண்டுகள் சிறைத்தண்டனை :

மியான்மரில் சட்டவிரோதமாக வாக்கி-டாக்கிகளை இறக்குமதி செய்து வைத்திருந்தது மற்றும் கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறிய குற்றத்திற்காக சூகிக்கு ஏற்கனவே 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மியான்மரை ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. அமலில் இருக்கும் ராணுவ ஆட்சியை எதிர்த்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

வழக்குகள் ஆதாரமற்றவை:

ஆனால், மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை மியான்மர் ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருவதாகவும் செய்தி வெளியாகி வருகிறது. மேலும், ஆங் சான் சூகியின் ஆதரவாளர்களும் மனித உரிமைக் குழுக்களும், அவர் மீதான வழக்குகள் ஆதாரமற்றவை எனவும் கூறி வருகின்றனர்

அதோடு, ஆங் சான் சூகி மீண்டும் அரசியலுக்குத் திரும்புவதைத் தடுக்கவும், 2023ஆம் ஆண்டுக்குள் ராணுவம் உறுதியளித்த புதிய தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவும் தான் இப்படி திட்டமிட்டு செயல்படுவதாக கூறுகின்றனர்.

MYANMAR, AUNG SAN SUU KYI, மியான்மர், ஆங் சான் சூகி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்