“வெடிக்கும் போராட்டங்கள்!”.. ‘பேஸ்புக்கிற்கு இம்ரான் கான் கடிதம்!’.. பிரான்ஸ் அதிபர் கூறிய அந்த சர்ச்சை கருத்து என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்பிரான்சில் 18 வயது இளைஞன் ஒருவன் தாக்கியதில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஆசிரியருக்கு ஆதரவாக பிரான்ஸ் அதிபர் தெரிவித்த கருத்துக்கு எதிராக இஸ்ரேலில் நூற்றுக்கணக்கானவர்கள் பிரான்ஸ் தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரான்சில் ஆசிரியர் ஒருவர் முகமது நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை மாணவர்களுக்கு காட்டியதாக கூறப்படுவதை அடுத்து 18 வயது இளைஞன் ஆசிரியரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் ஆசிரியர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இளைஞன் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதனால் இளைஞனும் உயிரிழந்தார். முன்னதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான், “இதுபோன்ற கேலிச்சித்திரத்தை ஒருபோதும் கைவிட மாட்டோம்” என்றும் இஸ்லாமியர்கள் பிரான்ஸ் நாட்டின் எதிர்காலமாக இருக்கமாட்டார்கள் என்றும் கூறி இருந்ததாகவும், அவருடைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இஸ்ரேலில் பிரான்ஸ் தூதரக குடியிருப்புக்கு முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது , “நபிகள் நாயகம் இஸ்லாத்தின் புனிதமான நபர். அவர் குறித்து அவதூறு பரப்பினால் அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அத்துடன் பிரான்சில் சில இஸ்லாமிய சமூகங்களில் அதிகாரத்தை கையில் எடுக்கப் போவதாக இஸ்லாமிய பிரிவினைவாதம் பேசி வருவதற்கு எதிராக போராட உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளதாகவும் இஸ்லாம் ஒரு மதமாக உலகம் முழுவதும் கடும் சிக்கலில் இருப்பதாகவும் பிரான்ஸ் அதிபர் தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்களும் பிரான்சில் வெளிப்படையாகவே மீண்டும் முகமது நபியின் சர்ச்சைக்குரிய கேலிச் சித்திரங்களும் மீண்டும் பிரான்சில் பெரும் பிரச்சனையை வெடிக்கச் செய்துள்ளன.
அத்துடன் பிரெஞ்சு தயாரிப்புகளை அரபு நாடுகளும் துருக்கி நாடுகளும் தங்கள் பல்பொருள் அங்காடிகளில் புறக்கணிக்க வேண்டும் என்கிற பிரச்சாரமும் தொடங்கப்பட்டது. இஸ்லாம் குறித்த மாக்ரானின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல நிறுவனங்கள் தங்களுடைய பல்பொருள் அங்காடிகளில் இருந்து பிரஞ்சு தயாரிப்புகளை வெளியேற்றினர்.
இதனிடையே என்கிற ஹேஷ்டேக் கத்தார், பாலஸ்தீனம், எகிப்து, அல்ஜீரியா, ஜோர்டன், சவுதி அரேபியா மற்றும் துருக்கி நாடுகளில் டிரெண்ட் ஆகியுள்ளது. இதனால் கத்தார் நாடும் தன் பங்குக்கு தங்கள் பல்கலைக்கழகத்தில் வழக்கமாக நடக்கும் பிரஞ்சு கலாச்சார நிகழ்ச்சியை காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கண்டனம் தெரிவித்ததுடன், பேஸ்புக்கிற்கு கடிதம் எழுதிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், யூதவெறுப்பு பரப்பப்படுவதற்கு எப்படி பேஸ்புக் செயல்பட்டதோ அதே போல் இப்போது இஸ்லாமிய வெறுப்பு பரப்பப் படுவதற்கு எதிராகவும், ஃபேஸ்புக் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
யூத விரோதம், இனப் படுகொலை, துவேஷம் ஆகியவற்றை தடை செய்வது போல் இஸ்லாமிய விரோதம், இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராகவும் பேஸ்புக் தடை விதிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்