'சும்மாலாம் எவர்க்ரீன் கப்பல் சிக்கல...' 'இதோட' சாபம் தான் எல்லாத்துக்கும் காரணம்... அட! என்னங்க சொல்றீங்க...? - அதுமட்டுமல்ல இன்னும் ரெண்டு சம்பவங்கள் நடந்திருக்காம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சூயஸ் கால்வாயில் எவர் கிவன் கப்பல் சிக்கியது குறித்து பல்வேறு புரளிக்களும் அனுமானங்களும் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த மார்ச் 23ம் தேதி சீனாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு சென்றுகொண்டிருந்த எவர் கிவன் கப்பல் பலத்த காற்று காரணமாக எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில் சிக்கித் குறுக்காக நின்று தரைத்தட்டியது.

சுமார் 20000 கண்டெய்னர்களை ஏற்றி சென்ற கப்பல் சூயஸ் கால்வாயில் குறுக்காக நின்றதால் அவ்வழியாக செல்லும் நூற்றுக்கணக்கான கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் சர்வதேச அளவில் கோடிக்கணக்கில் வர்த்தக இழப்பு ஏற்பட்டதுள்ளது.

இந்த சம்பவம் நடந்ததற்கு காரணம், எகிப்தில் உள்ள பார்வோன்கள் என்றழைக்கப்படும் மம்மிகளின் சாபமே காரணம் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

எதனால் மம்மிகள் சாபம் விட்டிருக்கும் என தேடுகையில், வரும் ஏப்ரல் 3ம் தேதி எகிப்து தலைநகர் கெய்ரோவின் Tahrir சதுக்கத்தில் உள்ள மம்மிகளின் அருங்காட்சியகத்தில் உள்ள மம்மிகள் Fustat பகுதியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்திற்கு இரண்டாம் மன்னர் ராம்செஸ்  மற்றும் ராணி அஹ்மோஸ்- நஃபெர்தாரி (Ahmose-Nefertari) யின் மம்மிகளும் மாற்றப்பட உள்ளன.

         

இதன் காரணமாக தான் எகிப்தில் ஆபத்துகள் ஏற்படுவதாக ஒரு கதை பரவப்பட்டு வருகிறது. இந்த சூயஸ் கப்பல் மட்டுமல்லாது, கடந்த மார்ச் 26ம் தேதி எகிப்தில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 22 பேரும், கெய்ரோவில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 23 பேரும் உயிரிழந்ததையும் குறிப்பிடுகின்றனர்.

இதுபோல கொடூர சம்பவங்கள் நடைபெற மம்மிகளின் சாபமே காரணம் என்று சிலர் டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும், “மன்னரின் அமைதியை குலைத்தால் மரணம் வந்து சேரும்” என்ற கருத்துக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த மாதிரியான கருத்துகள் பரப்பபடுவதற்கு தொல்லியல்துறை ஆய்வாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், மம்மிக்கள் மாற்றப்படுவதால் அவற்றிற்கு மரியாதை தான் ஏற்படும், சாபம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்