அமெரிக்கா சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்க விரும்புறீங்களா?.. 'தடுப்பூசி சுற்றுலா' அறிமுகம்!.. '4 பேக்கேஜ் இருக்கு'!.. டிராவல்ஸ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கா சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள 'கொரோனா தடுப்பூசி சுற்றுலா' திட்டம் ஒன்றை டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தி உள்ளது.
அமெரிக்க ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, டிசம்பர் 13 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு முதல் சுற்று தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையைச் சேர்ந்த சுற்றுலா டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று இந்தியாவை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகளை பெற விரும்புவோருக்கு 'தடுப்பூசி சுற்றுலா' என்று ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
வாடிக்கையாளர்களை ஈர்க்க அமெரிக்காவிற்கு ரூ. 1.75 லட்சம் மதிப்புள்ள நான்கு நாள் சுற்றுப்பயணப் பேக்கேஜ்களை கொரோனா வைரஸ் தடுப்பூசியை மையக் கருப்பொருளாகக் கொண்டு டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தி உள்ளது.
"ஆபத்தான வைரஸ் நோய்க்கிருமிகளுக்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கு முதல் ஆளாக இருப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது" என அந்த நிறுவனத்தின் விளம்பரத்தை சுட்டிக்காட்டி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு உள்ளது.
அந்த நிறுவனத்தின் ஒரு வாட்ஸ்அப் விளம்பர செய்தியில் ஃபைசர் தடுப்பூசி அமெரிக்காவில் விற்க அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன் (தற்காலிக தேதி டிசம்பர் 11), தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் தடுப்பூசி வழங்க தயாராக உள்ளோம்.
ரூ .1.75 லட்சம் செலவில் டெல்லி-நியூயார்க்-டெல்லி விமான டிக்கெட் கட்டணம், மூன்று பகல் மற்றும் நான்கு இரவுகளுக்கு ஓட்டல் கட்டணம் மற்றும் ஒரு தடுப்பூசி ஆகியவை அடங்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.
"நாங்கள் எந்த தடுப்பூசியையும் வைத்திருக்கவில்லை அல்லது வாங்கவில்லை. நாங்கள் ஏற்பாடு செய்யும் அனைத்தும் அமெரிக்காவின் சட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்கும். உங்கள் தேவைகளை மட்டுமே நாங்கள் வழங்குவோம். நாங்கள் இப்போது எந்த முன்கூட்டி வைப்புத்தொகையை சேகரிக்கபோவதில்லை.
உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், வயது மற்றும் உங்கள் உடல் பிரச்சினைகள் மற்றும் பாஸ்போர்ட் நகலுடன் விண்ணப்பிக்கவும். மீதமுள்ளவை அங்குள்ள சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ அனுமதிகளின்படி செய்யப்படும்.
அமெரிக்கர்களைத் தவிர மற்றவர்களுக்கு அதிகாரப்பூர்வ விற்பனைக்கு அவர்கள் அனுமதிக்காவிட்டால், நாங்கள் உங்களுக்கு தடுப்பூசி கொடுக்க முடியாது" என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ரூ.500 பில்லுக்கு... ரூ.2 லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்!!.. 'யார் சாமி இவரு'!?.. கதிகலங்கிப் போன ஊழியர்கள்!
- ‘Lockdown-ஐ மீறி வந்து.. போலீஸை பார்த்ததும் பம்பிய நபர்!’.. 'அனுமதி சான்றிதழில் எழுதியிருந்த காரணத்தை பார்த்து'.. ‘ஒரு கணம்’ உறைந்துபோய் நின்ற போலீஸார்!
- 'ஆறு மனமே ஆறு'!.. 'போனது போச்சு... ஆக வேண்டியத பாருங்க'!.. டிரம்ப் எடுத்த அதிசய முடிவு!.. ஜோ பைடன் ஹேப்பி அண்ணாச்சி!!
- 'ஒரு வழியாக பயன்பாட்டிற்கு வரும் கொரோனா தடுப்பூசி!!!'... 'தேதியுடன் முக்கிய தகவலை பகிர்ந்த தடுப்பூசி திட்டத்தின் தலைவர்!...
- 'ஆஹா... ஆரம்பிச்சிட்டாங்களா!'... குறைந்து விலைக்கு விற்பது யார்?.. கடும் போட்டி!.. மீண்டும் மோதிக் கொள்ளும் அமெரிக்கா-ரஷ்யா!
- 'அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வரும் முன்பே'... 'அதன் தடுப்பூசிக்கு முந்திக்கொள்ளும் நாடு?!!'... 'இந்த வாரத்திலேயே வரவுள்ள ஹேப்பி நியூஸ்!!!'...
- கொரோனாவால் இறந்த முதியவர்... 'காரியம்' முடிஞ்சதுக்கு அப்புறம்... எதிர்பாராத திருப்பம்!.. ஈமச்சடங்கின் போது நடந்த 'அதிசயம்'!.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!!
- ‘தமிழகத்தில் இன்றைய (23-11-2020) கொரோனா பாதிப்பு அப்டேட்’... ‘குணமடைந்தவர்கள் எத்தனை பேர்?... சென்னை நிலவரம் என்ன???...
- மகாத்மா காந்தியின் ‘கொள்ளுப்பேரன்’ கொரோனாவால் உயிரிழப்பு.. ‘3 நாளைக்கு முன்னாடிதான் பிறந்தநாள் கொண்டாடினாரு’.. உறவினர்கள் வேதனை..!
- 4 கண்டத்தை தாண்டி உயிர் பிழைத்த நபர்.. கடைசியாக கொத்திய ‘ராஜநாகம்’.. டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!