வேற வேற நிறம் கொண்ட இரட்டைக் குழந்தைகள்.?? "மில்லியன்'ல ஒருத்தருக்கு தான் இப்டி நடக்குமாம்".. வியக்க வைத்த பின்னணி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பெண் ஒருவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த நிலையில், அவர்களை பார்த்து ஒரு நிமிடம் அந்த பெண் குழம்பிய நிகழ்வும், இதற்கான காரணம் என்ன என்பதையும் விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

Advertising
>
Advertising

Also Read | திருமண அழைப்பிதழில் இருந்த Website.. "இத எதுக்குங்க இங்க போட்டு வெச்சு இருக்கீங்க??" அதிர்ந்த நெட்டிசன்கள்

பொதுவாக, இரட்டைக் குழந்தைகள் பிறப்பது என்பது, நிச்சயம் அந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு டபுள் சந்தோசம் தான்.

சில இரட்டை குழந்தைகள் பிறக்கும் நேரத்தின் அடிப்படையில் சற்று வித்தியாசமாக தெரிந்தாலும், மறுபக்கம் அப்படியே அச்சு அசலாக இருக்கும் இரட்டைக் குழந்தைகள் மத்தியில் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க சில நேரம் பெற்றோர்கள் கூட திணறி போவார்கள்.

அப்படி ஒரு சூழ்நிலையில், இங்கிலாந்தின் நாட்டிங்காம் என்னும் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணான Chantelle Broughton என்பவருக்கு கடந்த சில மாதத்திற்கு முன் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

அப்போது, குழந்தையை செவிலியர்கள் கையில் கொடுத்த பிறகு தான், அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஒரு சேர அவர்களுக்கு காத்திருந்தது. ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இரட்டைக் குழந்தைகள் கிடைத்த நிலையில், இரண்டு குழந்தைகளும் வெவ்வேறு நிறத்தில் இருந்துள்ளனர். இதில், பெண் குழந்தைக்கு Azirah என்றும், ஆண் குழந்தைக்கு Ayon என்றும் Chantelle - Ashton தம்பதி பெயரிட்டுள்ளனர்.

இதில், விந்தையான விஷயம் என்னவென்றால், குழந்தை Ayon வெள்ளை நிறத்தில் பச்சை நிறக் கண்களுடனும், குழந்தை Azirah மாநிறத்தில் பழுப்பு நிற கண்களுடனும் இருக்கின்றனர். இதன் காரணமாக, Chantelle-வின் குழந்தைகளை பார்க்கும் பலரும், இந்த இரண்டு குழந்தைகளும் உங்களுடையது தானா என பலரும் கேட்கிறார்களாம்.

இரட்டைக் குழந்தைகளுக்கு இடையே இருக்கும் இந்த வேறுபாடு என்பது பலரையும் குழப்பத்திலும், வியப்பிலும் ஆழ்த்தி உள்ளது.

இதற்கான காரணம் என்னவென்றால், Chantelle உடைய தாய் வழி தாத்தா ஒருவர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர். அதே போல, அவரது கணவரான Ashton-னின் பெற்றோரில் ஒருவர் ஜமைக்கா நாட்டையும் மற்றொருவர் ஸ்காட்லாந்து நாட்டையும் சேர்ந்தவர்கள். இதன் காரணமாக தான், அவர்களுக்கு கிடைத்த இரட்டைக் குழந்தைகளும் இரு வேறு நிறங்களில் இருந்துள்ளது.

அது மட்டுமில்லாமல், இப்படி வெவ்வேறு நிறங்களில் குழந்தைகள் பிறப்பது என்பது மில்லியனில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும் அரிதான நிகழ்வு என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது பற்றி பேசும் குழந்தைகளின் தாயாரான Chantelle, "குழந்தைகள் பிறந்த அடுத்த சில வாரங்களுக்கு எனது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களால் கூட இதனை நம்ப முடியவில்லை. அவர்களின் முடி கூட வித்தியாசமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர்களை நான் வெளியே கொண்டு செல்லும் போது, பலரும் அவர்களை வியப்புடன் தான் பார்த்து செல்கின்றனர்" என கூறி உள்ளார்.

Also Read | "இதுவும் பொண்ணோட கடமை தான்".. 59 வயது தாய்க்கு மணமகன் தேடிய மகள்.. மனம் நெகிழ வைக்கும் பின்னணி

MOTHER, TWINS BABY, TWINS BORN WITH DIFFERENT SKIN TONES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்