'20 வருஷம் நாங்க வாங்குனதை திருப்பி கொடுக்கணும்'... 'இவர் தான் பிரதமரா'?... 'பேரதிர்ச்சியில் உலக நாடுகள்'... யார் இந்த முல்லா?
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபான்களுக்கிடையே இருந்த உரசல் காரணமாக ஆட்சி அமைப்பதில் காலதாமதம் நிலவி வந்தது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் கடந்த மாதம் 15-ந்தேதி தாலிபான் பயங்கரவாதிகள் அந்த நாட்டை முழுமையாக ஆக்கிரமித்தனர். அதனைத்தொடர்ந்து அங்கு புதிய ஆட்சியை அமைக்கும் பணிகளில் தாலிபான்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்கள்.
அந்தவகையில் பயங்கரவாத அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரும், அந்த அமைப்பின் தற்போதைய தலைவருமான முல்லா அப்துல் கனி பரதர் புதிதாக அமையும் அரசின் தலைமை பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தாலிபான்களுக்கு ஆதரவாகச் செயல்படும் பாகிஸ்தானை மையமாகக் கொண்ட ஹக்கானி வலைக்குழுவுக்கும் முல்லா அப்துல் கனி பரதருக்கும் இடையிலான அதிகார போட்டி காரணமாக புதிய அரசு அமைவதில் காலதாமதம் நிலவி வந்தது.
இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானில் அமையவிருக்கும் இடைக்கால அரசு குறித்த அறிவிப்பைத் தாலிபான்கள் நேற்று முன்தினம் அறிவித்தனர். அந்த வகையில் பிரதமராக முல்லா ஹசன் அகுந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். முல்லா அப்துல் கனி பரதருக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முல்லா ஹசன் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளது, உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் முந்தைய தாலிபான்கள் (1996-2001) ஆட்சியில் சக்தி வாய்ந்த தலைவராக இருந்துள்ளார். தாலிபான்கள் ஆட்சியில் அவர் துணைப் பிரதமராகவும் வெளியுறவு மந்திரியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். முல்லா ஓமருடன் சேர்ந்து தாலிபான் அமைப்பை நிறுவியவர்களில் இவரும் ஒருவராவார்.
இவர் முல்லா ஓமருக்கு மிகவும் நெருக்கமானவர். முன்னதாக கடந்த 2001-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் பாமியான் நகரிலிருந்த உலகப் புகழ் பெற்ற புத்தர் சிலையைக் குண்டு வைத்துத் தகர்க்க மூலகாரணமாக இருந்தவர் இவர் தான்.
இதனால் உலக அளவில் மிகவும் கொடூரமான பயங்கரவாதியாக அறியப்பட்ட முல்லாவை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தனது பயங்கரவாத தடுப்பு பட்டியலில் சேர்த்தது. இப்போதும் ஐ.நா. தடைப்பட்டியலில் அவரது பெயர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்