ஆப்கானிஸ்தானின் புதிய அதிபர் 'இவர்' தான்!.. தாலிபான்கள் வியூகம்!.. யார் இவர்? பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

 ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது அமையவிருக்கும் புதிய ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து, அந்நாடு முழுவதும் தாலிபான் வசமாகியுள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் போர் முடிவுக்கு வந்ததாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் அதிபராக இருந்து வந்த அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். ரத்தம் சிந்துவதை தடுப்பதற்காகத்தான் நாட்டை விட்டு வெளியேறியதாக கூறியுள்ள அவர், தான் ஆப்கானிஸ்தானில் இருந்திருந்தால் எண்ணற்ற தேசபக்தர்கள் இறந்திருப்பார்கள் எனவும், காபூல் சிதைக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆப்கான் தங்கள் வசம் வந்துள்ளதையடுத்து, இடைக்கால அரசு அமைக்கும் முயற்சியில் தாலிபன்கள் ஈடுபட்டுள்ளதாக வெளிவந்த தகவலை அந்த அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதற்கிடையே முல்லா அப்துல் கனி பரதர் என்பவர் ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முல்லா அப்துல் கனி பரதர், தாலிபான் இயக்கத்தை நிறுவியவர்களுள் ஒருவர் ஆவார். தாலிபான் நிறுவனர் முல்லா உமரின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக முல்லா அப்துல் கனி பரதர் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது தாலிபான்களின் அரசியல் பிரிவுத் தலைவராக உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் ஒப்பந்தத்தில் தாலிபான்கள் கையெழுத்திட்டதை இவர் மேற்பார்வை செய்தது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்