'ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர்...' 'மீண்டும் முகேஷ் அம்பானி முதலிடம்...' 'சீனா தொழிலதிபர் ஜாக்மாவை பின்னுக்குத் தள்ளினார்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் மீண்டும் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியுள்ளார் முகேஷ் அம்பானி.

இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த சில மாதங்களுக்கு முன் கடும் வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில், முகேஷ் அம்பானி ஆசிய பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதையடுத்து 2018-ஆம் ஆண்டு வரை முதலிடத்தில் இருந்த அலிபாபாவின் நிறுவனர் ஜாக் மா மீண்டும் ஆசிய பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். சீன தொழிலதிபதிரான ஜாக் மாவின் நிகர சொத்து மதிப்பு 44.5 பில்லியன் டாலர் ஆகும். இது அம்பானியின் சொத்து மதிப்பை விட 2.6 பில்லியன் டாலர் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், முகேஷ் அம்பானி நிர்வகித்து வரும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீசின் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனக் குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஜியோ பிளாட்பார்ம்சின் 10% பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. இதற்காக ஃபேஸ்புக் ரூ43,574 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளது.

இதனால், அமெரிக்க பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்குகள் 10 சதவீதம் லாபத்தை ஈட்டியது. இதனால் அம்பானியின் சொத்து மதிப்பு புதனன்று ஒரே நாளில் 4.7 பில்லியன் டாலர் உயர்ந்து 49.2 பில்லியன் டாலராக அதிகரித்தது. இதன் மூலம் சீனாவின் அலிபாபா குழும தலைவரான ஜாக் மாவை விட 3.2 பில்லியன் அதிக சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி மீண்டும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரuக உயர்ந்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்