ஒருவரையொருவர் தாக்கி சண்டை நாடாளுமன்றத்தில் உச்சக்கட்ட மோதல், என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜோர்டான்: ஜோர்டான் நாட்டு நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒருவரையொருவர் தாக்கி சண்டை நாடாளுமன்றத்தில் உச்சக்கட்ட மோதல், என்ன காரணம்?
Advertising
>
Advertising

ஜோர்டான் நாட்டின் நாடாளுமன்றத்தில் அரசமைப்பு திருத்தம் தொடர்பான விவாதத்தின் போது உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம உரிமை:

மத்திய கிழக்கு நாடான ஜோர்டான் நாட்டின் நாடாளுமன்றத்தில், அண்மையில், அரசமைப்பில் திருத்தம் செய்வது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அரசமைப்பின்படி அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை வழங்குவது தொடர்பாகவும், பெண்களை அப்பட்டியலில் இணைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் விவாதத்தின் போது இரு தரப்பினரிடையே மோதல் மூண்டது. இதனால் அவையிலிருந்து அனைவரும் வெளியேறும்படி அவைத் தலைவர் அப்துல் கரிம் துக்மி உத்தரவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பேரவை துணைத் தலைவர் சுலைமான் அபு யாங்யா, அவையை நடத்த அப்துல் கரிம் துக்மிக்கு தார்மீக உரிமையில்லை என தெரிவித்தார்.

வார்த்தை போர்:

இதனால் அந்த அவையில் கடும் அமளி நிலவியது. ஒருவரையொருவர் வார்த்தைகளை அள்ளி வீசி திட்டினர். சத்தம் கடுமையானது. போலீசார் வந்து தடுத்தும் பயனில்லை. பேப்பர்களை வீசத் தொடங்கினார்கள். அனைவரும் சேர்ந்து அமளியில் ஈடுபட அங்கு பணிபுரிந்த காவலாளிகளுக்கும் எட்துவும் செய்ய முடியவில்லை. எவ்வளவோ அமைதியாக இருங்கள் என்று கேட்ட பின்பும் அடங்காமல் வார்த்தைப் போர் அதிகமானது.

கடும் மோதல்:

இந்த வாக்குவாதம் இருவருக்கு இடையே கைகலப்பில் முடிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒருகட்டத்தில் கோவம் எல்லைக்கு மீறி உடையை பிடித்து இழுத்து பயங்கரமாக சண்டையிட்டனர். இந்த சம்பவம் அனைத்துமே நேரைலையில் மக்கள் பார்ப்பார்கள் என்பதை மறந்து ஒருவரையொருவர் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.

நேரலையில் ஒளிபரப்பு:

இது தொடர்பான வீடியோ காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பானது. அதனைத் தொடர்ந்து சக உறுப்பினர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

JORDAN, PARLIAMENT, ATTACK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்