"உணவு பொருள் வாங்கக்கூட மக்கள் வரிசையில் நிற்பது கவலையளிக்கிறது".. ராஜினாமா செய்த இலங்கை அமைச்சர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இலங்கையின் மோசமான பொருளாதார நிலைமையை சுட்டிக்காட்டி அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக இலங்கை அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொருளாதார நெருக்கடி
இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து உள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலையும் விண்ணை தொட்டுள்ளது. அரிசி, பிரெட், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், உணவு பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் தினந்தோறும் 13 மணி நேரம் மின்வெட்டு நிலவி வருவதால் பொதுமக்கள் அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
போராட்டம்
இதனை அடுத்து இலங்கை தலைநகரில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று கொழும்புவில் உள்ள அவர் வீட்டின் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 45 பேர் கைது செய்யபட்டுள்ளதாக தெரிகிறது. கொழும்புவின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும், இலங்கையில் நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக அவசர நிலை பிரகடனத்தை அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்து உள்ளார்.
பதவி விலகல்
இந்நிலையில், இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நிலைமையை சுட்டிக்காட்டி அமைச்சர் ரோஷன் ரணசிங்கே பதவி விலகுவதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து, இலங்கை அதிபருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் உணவு பொருட்கள் வாங்கக்கூட பொதுமக்கள் வரிசையில் நிற்பது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்தும், இலங்கை பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்டத் தலைமைப் பதவியிலிருந்தும் மே 01 ஆம் தேதி முதல் இராஜினாமா செய்வதாக ரோஷன் ரணசிங்கே அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கடும் பொருளாதார சிக்கலில் இலங்கை சிக்கித் தவிக்கும் நிலைமையில் ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர் பதவி விலகுவதாக அறிவித்திருப்பது இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்
திடீரென மயங்கி விழுந்த சீமான் .. ஆம்புலன்சில் மருத்துவமனை அழைத்து சென்ற தொண்டர்கள்.. பரபரப்பு வீடியோ
தொடர்புடைய செய்திகள்
- 320 அப்ளிகேஷன்களுக்கு ஆப்பு.. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் சொன்ன தகவல்..!
- "இலங்கை இந்த நிலைக்கு வந்ததுக்கு அதுதான் காரணம்".. வீடியோவில் உண்மையை உடைத்த இலங்கை மூத்த பத்திரிக்கையாளர்..!
- என்னது ஒரு லிட்டர் பால் இவ்ளோ விலையா..? போராட்டத்தில் இறங்கிய மக்கள்..என்ன நடக்கிறது இலங்கையில்..?
- வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு.. இலங்கையில பெட்ரோல் விலை எவ்ளோ தெரியுமா?.. திணறும் மக்கள்..!
- MOHALI TEST: INDvSL - மொஹாலி டெஸ்ட் நடக்குமா? பிட்ச் யாருக்கு சாதகம்... இந்தியா ஜெயிக்க என்ன செய்யனும்! மழை வருமா? முழு தகவல்
- "அவர் திரும்ப வருவார்னு தெரியும்! அதுனால தான் அவர் T20-ல பெரிய ப்ளேயரா இருக்காரு" - தினேஷ் கார்த்திக் பாராட்டிய சன் ரைசர்ஸ் வீரர்
- "இந்த நூற்றாண்டோட ஹிட்லர் தான் புதின்.. இத மட்டும் அவரு பண்ணலன்னா மூன்றாம் உலக போர் கன்ஃபார்ம்.." எச்சரிக்கும் உக்ரைன் எம்.பி
- போச்சுடா...இலங்கை T20 தொடரில் இருந்து அதிரடி பேட்ஸ்மேன் நீக்கம்..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
- விமானிக்கு ரூ.85 கோடி அபராதம்.. என் மேல தப்பு இல்லங்க.. வேணும்னா கருப்பு பெட்டிய செக் பண்ணுங்க.. நடந்தது என்ன?
- அந்த கார்ல லிஃப்ட் கேட்டு பாப்போம்.. ஐயோ மேடம் நீங்களா? எவ்ளோ பெரிய ஆளு நீங்க.. காரில் ஏறியவுடன் துள்ளி குதித்த பெண்கள்