ஜப்பானின் ஃபுஜி மலையில் மலையேற்றத்தின்போது நேரலை (லைவ்) செய்த இளைஞர் ஒருவர் தவறி விழுந்துள்ளார்.
ஜப்பானின் உயரமான ஃபுஜி மலையில் குளிர்காலத்தில் மலையேற்றம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தடையைப் பொருட்படுத்தாமல் டெட்ஜோ என்ற இளைஞர் அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளார். திங்கட்கிழமை மதியம் மலையேற்றத்தைத் தொடங்கியவர் அதை தனது செல்ஃபோன் மூலம் யூடியூபில் நேரலை செய்துள்ளார்.
தனது பயணத்தை நேரலையில் விவரித்துக்கொண்டே வந்த டெட்ஜோ, “நான் சரியான பாதையில் இறங்குகிறேனா? நான் வழுக்குகிறேன். இந்த செங்குத்தான பாதை மிகவும் ஆபத்தானது. வழுக்குகிறது” என்ற சத்தத்தோடு வீடியோவிலிருந்து மறைந்துள்ளார். பின்னர் அவருடைய சத்தம் மட்டுமே கேட்க, சிறிது நேரத்தில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்கிறது. இதை நேரலையில் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துபோய் உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து 10 பேர் கொண்ட மீட்புக்குழு டெட்ஜோவைத் தேடும் பணியில் இறங்கியுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் தேடியும், அந்தப் பகுதியில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. பின்னர் டெட்ஜோவின் உடல் ஃபுஜி மலையின் ஷிஜுகோ பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அந்தத் தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஓடும் காரில் வைத்து ஒரு மணி நேரம்..'.. இரவுப்பணி முடிந்து திரும்பிய சிறுவனுக்கு 6 இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்!
- 'பசிக்கும்ல'... ‘சாப்பாட்டுக்கு முன்னாடி’... ‘இதெல்லாம்’... ‘இன்னொரு சிறுவனின் வைரல் வீடியோ’!
- ‘நொடியில் நடந்த பயங்கர விபத்தில்’.. ‘ஆற்றில் கவிழ்ந்த கார்’.. ‘5 மாத குழந்தையை தூக்கி வீசிக் காப்பாற்றிய தந்தை’..
- ‘டிவியில் சுஜித் செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்த’.. ‘பெற்றோரின் அலட்சியத்தால்’.. ‘2 வயது பெண் குழந்தைக்கு நடந்த பயங்கரம்’..
- 'சென்னையிலிருந்து ஜப்பான்'... 'நேரடியாக தொடங்கப்பட்ட புதிய சேவை'... 'மகிழ்ச்சியில் பயணிகள்'!
- ‘நொடிப்பொழுதில் ஆட்டோவும், லாரியும்’.. ‘நேருக்கு நேர் மோதி கோர விபத்து’.. ‘மதுரையில் 6 பேர் பலியான பயங்கரம்’..
- ‘5 ஆண்டுகளில் 20 லட்சம் ரூபாய்’.. ‘படுக்கையறையில் வைத்த ரகசிய கேமராவால்’.. ‘சிக்கிய சென்னைப் பெண்’..
- ‘கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்தால் ’.. ‘பச்சிளம் குழந்தையுடன் உயிர் தப்பிய தம்பதி’.. ‘திகிலூட்டும் வீடியோ’..
- 'ஆற்றுக்கு நடுவே ஆபத்தான பாலம்'.. '60 பயணிகளைக் காப்பாற்றிய அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்!'
- ‘அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம்’.. ‘லாரி மீது மோதி கோர விபத்து’.. ‘ரேஸ் மோகத்தால் இளைஞர்களுக்கு நடந்த பயங்கரம்’..