'தவமிருந்து'... '20 வருஷம் கழித்து பிறந்த குழந்தை'... '13 வாரத்தில் நிகழ்ந்த கொடூரம்'... 'நெஞ்சை உலுக்கும் சோகம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தில் 20 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற 3 மாத குழந்தை உயிரிழந்தபோது, தன் மகனை நெஞ்சோடு அணைத்து கதறும் மனதை உருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இங்கிலாந்தின் நார்போல்க்கைச் சேர்ந்தவர் டாமி ஐரேசன் (39). ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று டாமியும் அவரது கணவரும் தீர்மானித்துள்ளனர். ஆனால் டாமிக்கு கர்ப்பமடைவதில் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் நீண்ட வருடங்கள் ஆன பிறகு 2017-ம் ஆண்டு டாமி கர்ப்பம் தரித்துள்ளார். குழந்தை கருவில் இருக்கும்போதே மரபணு பிரச்சனை இருப்பதை மருத்துவர்கள் டாமியிடம் கூறினர். ஆனால் 20 வருடம் கழித்து கர்ப்பம் தரித்திருப்பதால் அதைக் கலைக்க டாமி மறுத்துவிட்டார்.

அதன்பிறகு ஒருநாள் திடீரென அறுவை சிகிச்சை மூலம் டாமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குறை பிரசவத்தில் பிறந்தாலும், அந்த குழந்தைக்கு வில்பர் என்று பெயர் வைத்து பெற்றோர் அகமகிழ்ந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தாலும் சீக்கிரமே சரியாகி விடுவான் என்று மருத்துவர்கள் தெரிவித்ததால், பெற்றோரும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் 13 வாரங்கள் ஆன நிலையில் குழந்தை வில்பருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மூளையில் பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும், குழந்தை வில்பரை காப்பாற்ற முடியவில்லை. கதறித் துடித்த தாய் டாமி, மருத்துவமனையின் வாசலில், தன் நெஞ்சோடு மகனை அணைத்துக் கொண்டு நடந்தார். அதுவே குழந்தை வில்பரை சுமந்துகொண்டு முதல் முறையாகவும், கடைசி முறையாகவும் நடப்பது என்பதால் மனது உடைந்து கதறித் துடித்தார்.

இந்தப் புகைப்படத்தை சுமார் ஒன்றை ஆண்டுகள் கழித்து தற்போது டாமி கண்ணீருடன் இணையத்தில் பதிவிட்டு தனக்கு நேர்ந்தது மற்ற தாய்மார்களுக்கு நேரக்கூடாது என்று கூறியுள்ளார். மேலும் வில்பரின் இதயத் துடிப்பை யானை பொம்மையில் பதிவு செய்து வைத்துள்ளதுடன், அவனது சாம்பலையும் அதில் பாதுகாத்து வருகிறார். பத்து மாசம் சுமந்து பெற்ற குழந்தை இனி இல்லை என்ற தாயின் மனவேதனை அந்த தாய்க்கு மட்டுமே புரிந்த மனவேதனையாகும்.

ENGLAND, MOTHER, SON, HEARTBREAKING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்