"மகள் குணமடைந்து இறுதிச்சடங்கை நடத்துவாள்..." 'மறைந்த' பின்னும் 'நம்பிக்கையுடன்' காத்திருக்கும் தாயின் சடலம்...' 'கொரோனா' ஏற்படுத்தும் 'ஆறாத காயங்கள்...'
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் ஜெனிபர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வந்து தனது தாயாரின் இறுதிச் சடங்கை நடத்துவார் என்ற நம்பிக்கையில் அவரது உடலை அவருடைய குடும்பத்தினர் சவபராமரிப்பு மையத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ்ஷையர் நகரில் வசித்து வந்தவர் அனுசுயா சந்திரமோகன். இவர், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி அங்குள்ள மருத்தவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல்நிலை மோசமாக சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய இங்கிலாந்து அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் ஜெனிபருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் அவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கேம்பிரிட்ஜ்ஷையரில் உள்ள ராயல் பாப்ஒர்த் மருத்தவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனினும், ஜெனிபர் குணமடைந்து தாய்க்கு இறுதி சடங்கு நடத்துவார் என்ற நம்பிக்கையில் அனுசுயாவின் உடலை அவருடைய குடும்பத்தினர் சவ பராமரிப்பு மையத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர். ‘ஜெனிபர் குணமடைந்து வரும் வரை அனுசுயாவின் உடலை பத்திரமாக வைத்திருக்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கிறோம்’ என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நீங்க பேசுனா மட்டும் போதும்'... ஸ்மார்ட் போன் மூலம்... கொரோனா தொற்றை கண்டுபிடிப்பது எப்படி?.. பிரம்மிக்கவைக்கும் படைப்பு!
- நுரையீரலை மட்டும் தான் பாதிக்கிறதா?.. கொரோனா வைரஸின் இன்னொரு முகம்!.. மருத்துவர்கள் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
- 'அமெரிக்கா மீது விழுந்த மரண இடி'... 'ரிப்போர்டை பார்த்து நொறுங்கி போன மக்கள்'... இப்படி தினம் தினம் செத்து பொழைக்கணுமா?
- 'நீங்க சொல்ற அந்த வௌவால் வூஹான்-லயே இல்ல!'.. ட்ரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!.. பின் வைரஸ் பரவியது எப்படி?
- ஆந்திர முதல்வர் ‘ஜெகன்மோகன் ரெட்டி’க்கு கொரோனா பரிசோதனை..! வெளியான தகவல்..!
- ஊரடங்கால் 'காண்டம்' மட்டுமில்ல... 'இந்த' விற்பனையும் படுஜோரா நடக்குதாம்!
- இன்னும் 2 நாள்ல 'கம்பெனி' ஓபன் ஆகலேன்னா... 'சம்பளத்தை' கட் பண்ணிருவோம்... ஊழியர்களுக்கு 'செக்' வைத்த 'முன்னணி' நிறுவனம்!
- 'இது' இல்லேன்னா இனிமே 'பெட்ரோல்' தர மாட்டோம்... அதிரடி 'முடிவெடுத்த' மாநிலம்!
- போர் தொடுக்க 'கொரோனாவ' பரப்பல... ஆனா வேற ஒரு 'காரணம்' இருக்கு... சீனாவுக்கு 'எச்சரிக்கை' விடுத்த அமெரிக்கா!
- இனிமே 'அந்த' மாதிரி செய்யக்கூடாது... அரிசி, காய்கறிகளுடன்... விவசாய இளைஞரின் 'வீட்டிற்கே' சென்ற எஸ்.பி!