இளைஞர்களுடன் ‘டேட்டிங்’.. காலேஜில் பல லட்சம் ஸ்காலர்ஷிப்.. மகளையே ஏமாற்றி அதிர வைத்த அம்மா..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மகளைப் போல நடித்து தாய் ஒருவர் பல லட்சம் ரூபாய் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

அமெரிக்க நாட்டின் மிசோரி பகுதியைச் சேர்ந்தவர் லாரா ஒக்லெஸ்பி (Laura Oglesby). இவர் தனது மகளின் போட்டோவை பயன்படுத்தி ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க சேர்ந்துள்ளார். 45 வயதான இவர், தனக்கு 22 வயதுதான் ஆகிறது என கூறி பலரையும் நம்ம வைத்துள்ளார்.

மேலும், தான் ஒரு கல்லூரி மாணவி என கூறி சுமார் 19 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஆகியவற்றை பெற்று 2 ஆண்டுகள் படித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் சமூக வலைதளமான ஸ்னாப்ஷாட்டில் ஒரு கணக்கை தொடங்கியுள்ளார். அந்த கணக்கில் தனது மகளின் போட்டோவை வைத்து, பல இளைஞர்களுடன் பேசி டேட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த இளைஞர்களிடமும் பண மோசடி செய்துள்ளார்.

இதனை அடுத்து தனது மகளின் பெயரில் ஒரு ஓட்டுநர் உரிமம் வாங்கி கொண்டு, தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினரிடம் தான் ஒரு குடும்ப வன்முறையை சந்தித்த பெண் என கூறி ஏமாற்றியுள்ளார். இந்த சமயத்தில் அவரது கல்விக்கடன் தொடர்பாக விசாரணை நடத்தியபோது லாரா ஒக்லெஸ்பி ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து காவல் நிலையத்தில் லாரா ஒக்லெஸ்பி மீது புகார் அளிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, லாரா ஒக்லெஸ்பியை கடுமையாக கண்டித்தார். மேலும் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் மகளைப் போல் நடித்து ஏமாற்றிய குற்றத்திற்காக மகளுக்கும், சம்பந்தப்பட்ட கல்லூரிக்கும் 13 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

COLLEGESTUDENT, MOTHER, DAUGHTER, USA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்