மகனின் கருவை சுமக்கும் தாய்.. இப்படி ஒரு முடிவுக்கு என்ன காரணம்.? நெகிழ்ச்சி பின்னணி..!!
முகப்பு > செய்திகள் > உலகம்மருமகளுக்கு கரு உருவாவதில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து, தனது மகனின் குழந்தையை பெற்றெடுக்க இருக்கிறார் தாய் ஒருவர்.
அமெரிக்காவின் உட்டாவா மாகாணத்தை சேர்ந்தவர் நான்சி ஹாக். இவருக்கு 56 வயதாகிறது. இவருடைய மகன் ஜெஃப் ஹாக் (32). இவருக்கு கேம்பிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதி ஆறு வருடங்கள் ஐவிஎஃப் சிகிச்சை பெற்றுவந்தனர். இதன்மூலம் இவர்களுக்கு வேரா மற்றும் அய்வா என்ற இரட்டையர்கள் பிறந்தனர். தற்போது இருவருக்கும் 3 வயதாகிறது. இதனையடுத்து டிஸீல் மற்றும் லூகா என்ற இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார் கேம்பிரியா. ஆனால், பிரசவத்தின்போது அவருடைய உடல்நிலை மோசமாகியுள்ளது. வேறுவழியின்றி கேம்பிரியாவின் கருப்பையை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். ஆகவே அவரால் மீண்டும் குழந்தையை பெற்றெடுக்க முடியாமல் போனது.
அதிர்ச்சி
இருப்பினும், ஜெஃப் ஹாக் மேலும் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பியிருக்கிறார். ஆனால், கேம்பிரியாவால் மீண்டும் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர்கள் கூறியதால் அவரது கணவர் ஜெஃப் ஹாக் மிகவும் அதிர்ச்சியடைந்திருக்கிறார். இந்த அதிர்ச்சியில் இருந்த அவருக்கு அவருடைய தாய் ஆறுதல் கூறியிருக்கிறார். இருப்பினும், இந்த தம்பதியின் கருக்கள் சேமிப்பில் இருப்பதை அறிந்த நான்சி புதிய ஆலோசனையை வழங்கியிருக்கிறார்.
பரிசோதனை
அதன்படி, கேம்பிரியாவின் கருவை மருத்துவ உதவி மூலமாக தனது கர்ப்பப்பையில் சுமக்க முடிவெடுத்திருக்கிறார் நான்சி. ஆனால், அவருடைய வயது காரணமாக இது சாத்தியமற்றது என்றே குடும்பத்தினர் நினைத்திருக்கின்றனர். இருப்பினும், மருத்துவ பரிசோதனை மூலம், நான்சி அதற்கு தகுதி பெற்றவர் என்பது உறுதியானவுடன், மருத்துவ சிகிச்சைக்கு உட்பட்டிருக்கிறார் நான்சி. வரும் நவம்பர் மாதம் நான்சிக்கு குழந்தை பிறக்க இருக்கிறது.
இதுபற்றி பேசிய அவர்,"நான் எனது மகனை சுமந்தது போலவே தற்போது என் பேத்தியையும் சுமக்கிறேன். குழந்தையை மிகவும் எனது மகன் மற்றும் மருமகள் விரும்புகின்றனர். ஆகவே அவர்களுக்கு நான் உதவ நினைத்தேன். முன்னெப்போதையும் விட நான் வலிமையாக உணர்கிறேன். 26 வருடங்களுக்கு பிறகு மீண்டும் குழந்தையை சுமப்பது பல உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது. என் மகனிடம் அவனுடைய குழந்தையை ஒப்படைக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக, 2022 ஜனவரி முதல் நான்சி சிகிச்சை பெற்றுவந்திருக்கிறார். குழந்தையை சுமப்பது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம் என்றும் அதுவே, தனது மகனுக்காக இதை செய்ய முடிந்தது வார்த்தைகளில் விவரிக்க முடியாத அனுபவம் என்கிறார் நான்சி.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நைட்ல காதலியை பார்க்கப்போன இளைஞர்.. மறைஞ்சு நின்ன இளம்பெண்ணின் அம்மா.. கொஞ்ச நேரத்துல கேட்ட அலறல் சத்தம்..!
- ஹோட்டல் ஊழியருக்கு லட்சக்கணக்கில் டிப்ஸ் கொடுத்த நபர்.. கோர்ட்டுக்கு போன உரிமையாளர்.. லாஸ்ட்ல தெரியவந்த உண்மை..!
- "கொஞ்சம் பொறுத்துக்கோங்க".. ரயிலில் தவித்த நிறைமாத கர்ப்பிணி.. தேவதை மாதிரி வந்த மருத்துவ மாணவி.. "நாடே இன்னைக்கி அவங்கள பத்தி தான் பேசுது"
- "எப்படி நடந்துச்சு'ன்னு இன்னும் கண்டுபிடிக்க முடியல".. திறக்கப்படாத வீட்டுக்குள் இருந்த தாய், மகன்.. பல மாசமா தொடரும் மர்மம்!!..
- அம்மா மாதிரி இருக்கு.. கோவையில் பஸ் பின்னாடியே ஓடுன குட்டிக்குதிரை.. கண்கலங்க வெச்ச சம்பவம்..
- "அவரு இறந்துட்டாரு".. உடல் உறுப்புகளை அகற்ற தயாரான மருத்துவர்கள்.. வேகமாக வந்த மனைவி சொன்ன பரபரப்பு விஷயம்!!
- Video : விமானத்தில் ஏறிய சிறுவன்.. மறுகணமே கட்டியணைத்து கொண்ட விமான பணிப்பெண்.. சுவாரஸ்ய பின்னணி!!
- "சாகுறதுக்கு முன்னாடி ஒருதடவை அவனை பார்த்துடனும்னு நெனச்சேன்".. ஒன்றரை வயதில் பிரிந்துபோன மகன்.. 25 வருஷத்துக்கு அப்பறம் நடந்த அதிசயம்..!
- வேற வேற நிறம் கொண்ட இரட்டைக் குழந்தைகள்.?? "மில்லியன்'ல ஒருத்தருக்கு தான் இப்டி நடக்குமாம்".. வியக்க வைத்த பின்னணி!!
- "இதுவும் பொண்ணோட கடமை தான்".. 59 வயது தாய்க்கு மணமகன் தேடிய மகள்.. மனம் நெகிழ வைக்கும் பின்னணி