மகளுக்காக 'சம்பாதிக்க' தான் அங்க போனாரு... ஆனா இனிமே அவளுக்கு 'அப்பா' இல்லை... உடைந்து 'அழுத ' காதலி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அவள் வளர்ந்து பட்டம் பெறுவதை பார்க்க அவர் தந்தை உயிருடன் இல்லை என கதறியழுதார்.

Advertising
Advertising

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தை சேர்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற 42 வயது கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த வாரம் போலீஸ் பிடியில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரை கீழே தள்ளி அவரின் கழுத்தில் போலீஸ் ஒருவர் கால் முட்டியால் மிதிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின. இதையடுத்து ஜார்ஜின் மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் தலைதூக்க ஆரம்பித்து இருக்கின்றன.

அமைதியாக தொடங்கிய இந்த போராட்டங்கள் தற்போது கலவரமாக வெடிக்க ஆரம்பித்துள்ளன. பல்வேறு நகரங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கட்டு இருந்தாலும், போராட்டக்காரர்கள் அஞ்சாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதில் போராட்டக்காரர்கள் தொடர்பாக அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துக்களால் பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதனால் கொரோனா கலவரங்களுக்கு மத்தியிலும் இந்த கலவரங்களை உலகம் உற்றுநோக்கி வருகிறது.

இந்த நிலையில் ஜார்ஜின் காதலியும் அவரின் நண்பர்களும் டெக்ஸாஸில் உள்ள ஹூஸ்டன் என்னும் நகரில் உரையாற்றினர். ஜார்ஜின் காதலி ராக்ஸி வாஷிங்டன் அவரின் மகள் கியானா இருவரும் பொதுவெளியில் தோன்றினர். ராக்ஸி பேசும்போது, ''அந்த காவல் அதிகாரி எங்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார். கியானாவுக்கு இனி அப்பா இல்லை. அவள் வளர்ந்து பட்டம் பெறுவதைப் பார்க்க அவளுடைய அப்பா இல்லை. அவளுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அப்போது அவளுக்கு அப்பா தேவைப்பட்டால், அவளுடைய அப்பா இனி வரப்போவது இல்லை. எனக்கு நீதி வேண்டும். ஏனென்றால், அவர் நல்ல மனிதர். மிகவும் நல்ல தந்தை,'' என்று அழுதபடியே பேசினார்.

அப்போது கியானா அவரை கட்டிப்பிடித்துக் கொண்டு அவர் அருகிலேயே நின்று கொண்டிருந்தார். தொடர்ந்து ஜார்ஜின் நண்பரும் என்பிஏ அணியின் வீரருமான ஜாக்சன்,'' அவர் ஹூஸ்டனில் இருந்து மினசோட்டா மாகாணத்துக்கு சென்றதன் காரணம், நன்கு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்கு தான். இந்த விவகாரத்தில் நான் கியானாவுக்கு ஆதரவாக இருப்பேன். எங்களுக்கு தேவை நீதி. அது கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்,'' என்று என்றார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்