“பட்டு மெத்தை.. சுற்றியும் பிடித்தமான பொம்மைகள்.. நடுவில் கிடந்த 10 வயது சிறுவன்!”.. பெற்ற மகனை தாயே கொலை செய்த அவலம்!.. நொறுங்க வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பெற்ற மகனை கொலை செய்தது ஏன் என்று நீதிமன்றத்தில் விளக்க வேண்டிய ஒரு துயரமான சூழ்நிலையில் பிரிட்டன் தாய் ஒருவர் தள்ளப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“பட்டு மெத்தை.. சுற்றியும் பிடித்தமான பொம்மைகள்.. நடுவில் கிடந்த 10 வயது சிறுவன்!”.. பெற்ற மகனை தாயே கொலை செய்த அவலம்!.. நொறுங்க வைக்கும் சம்பவம்!

கடந்த ஞாயிறு அன்று போலீஸ் நிலையத்திற்கு ஒரு பெண் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் அப்பெண்ணின் வீட்டுக்கு விரைந்தனர். அந்த வீட்டில் போலீசார் கண்ட காட்சி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 5 லட்சத்து 44 ஆயிரம் பவுண்டுகள் மதிப்புடைய அந்த ஆடம்பர வீட்டின் பிரம்மாண்ட படுக்கை அறையில் பட்டு மெத்தையில் 10 வயது சிறுவன் ஒருவன் படுக்க வைக்கப்பட்டிருந்துள்ளான். அந்த சிறுவனை சுற்றி அந்த சிறுவனுக்கு பிடித்த பொம்மைகள் இருந்தன. ஆனால் அந்த சிறுவனுக்கு உயிர் மட்டும்தான் இல்லை. ஆமாம் 10 வயதான Dylan Freeman என்கிற அந்த சிறுவனை அவனைப் பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் தான் இதில் உருக்கக் கூடியது.

அது மட்டுமல்லாமல் சிறுவனது வாய்க்கும் ஸ்பாஞ்ச் போன்ற ஒன்றையும் திணித்து சிறுவனின் மூச்சை நிறுத்தி விட்டதாகவும் அந்த தாய் Olga Freeman என்பவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இப்படி பெற்ற மகனை கொல்ல வேண்டிய சூழல் Olga Freeman-க்கு எதற்காக உண்டானது என்பதற்கான பதில்தான் இன்னும் துயரம். ஒரு கடுமையான ஆட்டிசக் குறைபாடு கொண்ட குழந்தைதான் Dylan Freeman. அதுமட்டுமல்லாமல் cohen syndrome என்கிற இன்னொரு மரபணு குறைபாடும் சிறுவனுக்கு இருந்தது.

அவன் தனது எண்ணங்களை வெளிப்படுத்தி பேசத்தெரியாத சிறுவனாக இருந்துள்ளான். வளர வளர அவனுக்கு முரட்டுத்தனம் அதிகரிக்க சிறுவனை கவனித்துக் கொள்வதற்காக 25 வயதான Rakesh Sukhla2 என்கிற இளைஞரை Olga Freeman நியமித்தார். ஆனாலும் அந்த இளைஞரால் சிறுவனை கவனித்துக் கொள்ள முடியாமல் போக அவர் நான்கு நாட்களிலேயே வேலையை விட்டு நின்று விட்டார். இதனையடுத்து சிறப்பு குழந்தைக்கான பள்ளி ஒன்றில் பயின்று வந்த Dylan Freeman ஒரு மாதமாக ஊரடங்கு காரணமாக பள்ளிக்கு செல்லாத செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 24 மணி நேரமும் அவனை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தாய்  Olga Freeman-க்கு ஏற்பட்டது.  Olga Freeman-ன் தோழி ஒருவரும் கொஞ்சம் அவ்வப்போது சிறுவனை கவனித்துக் கொள்ள உதவியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் மகனை கவனித்துக் கொள்வதற்காக, உள்ளூர் கவுன்சில் உதவியை  Olga Freeman நாடியபோது அவர்களிடமும் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதனால் தனியாக போராடி, முடியாமல் பெற்ற மகனையே கொல்லத் துணிந்து இருக்கிறார்  Olga Freeman. இவர் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரும் இந்திய நடிகை தீபிகா படுகோனேவின் நண்பருமான Dean Freeman என்பவரின் மனைவி என்பதும், நீண்ட காலத்திற்கு முன்பே இருவரும் பிரிந்து விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  Dean Freeman தன் மகனை இழந்திருப்பது அவருக்கு இழப்பு என்று குறிப்பிட்டுள்ள தீபிகா படுகோனே, அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்