'நிச்சயமா அது ஆவி தான்'... 'அது எங்க எல்லாம் தொடும் தெரியுமா'... '3 ஆண்டுகளாக அனுபவித்த நரக வேதனை'... ஒரே ஒரு நொடியில் கதிகலங்க வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமானுஷ்ய விஷயங்கள் இருக்கிறதா இல்லையா என்பது அவ்வப்போது பெரும் விவாத பொருளாக மாறும். அந்த வகையில் 3 ஆண்டுகளாக ஆவி ஒன்று தன்னை துன்புறுத்தி வந்ததாகப் பெண் ஒருவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் Charlene Smith. இவர் வசித்து வரும் வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர் திடீரென படிக்கட்டிலிருந்து தவறி விழுந்துள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவர் பரிதாபமாக இறந்து போனார். இது Charleneயை வெகுவாக பாதித்த நிலையில், அன்றிலிருந்து அவருக்குப் பிரச்சனை ஆரம்பித்துள்ளது.

அன்று முதல் தன்னை தவிர்த்து வீட்டில் யாரோ இருப்பது போல Charlene உணர்ந்துள்ளார். வீட்டில் பொருட்கள் அவ்வப்போது தானாக நகர்ந்துள்ளது. ஜன்னல்களும் காற்று இல்லாத நேரத்தில் கூட பயங்கரமாக அடித்துக் கொண்டது. ஆனால் இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று Charlene மீது நகத்தால் அடிக்கடி கீறல்கள் விழுந்துள்ளன. 9 மாதங்கள் இந்த நகர வேதனையை Charlene அனுபவித்த நிலையில் என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பிப் போனார்.

ஒரு கட்டத்தில் உடையை இழுப்பது போன்ற சம்பவம் நிகழ, எங்கே தான் உயரத்திலிருந்து குதித்துவிடுவேனோ என அச்சம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அவரது பிள்ளைகளும் தங்கள் மீது யாரோ உரசிக்கொண்டு செல்வதாக அவ்வப்போது கூறியுள்ளார்கள். ஒருவேளை, இறந்த தன்னுடைய உறவினர் தான் தன்னை தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறாரோ என்று Charlene நினைத்துள்ளார். ஆனால் அந்த ஆவி தனது உடலின் மர்ம உறுப்புகளைத் தொடுவதை உணர்ந்ததாகக் கூறிய Charlene, நிச்சயம் அது தனது உறவினராக இருக்காது என நினைத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆவியுடன் பேசுபவர்கள் எனப் பலரை வீட்டிற்கு அழைத்து வந்த Charleneவின் நிலைமை இன்னும் மோசமானது. இரவில் தனக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழும் என்ற பயத்தில் பல இரவுகளைத் தூங்காமல் கழித்துள்ளார். இந்நிலையில், Charleneக்கு 2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் ஆறாவதாக ஒரு குழந்தை பிறந்திருக்கிறது.

Chardonnay என்ற அந்த குழந்தையை வீட்டுக்குக் கொண்டுவந்ததும், அடுத்த நிமிடமே அந்த தீய ஆவி வீட்டை விட்டு வெளியேறிவிட்டிருக்கிறது. அதற்குப் பிறகு வீட்டில் எந்த அதிர்ச்சி சம்பவங்களும் நிகழவில்லை என Charlene கூறியுள்ளார். எனவே தனது மகளைத் தனது காவல் தேவதை என அழைக்கும் Charlene, தற்போது வீட்டில் எந்த அமானுஷ்யமான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்