“96 மணி நேரம்.. 4 பகல்.. 3 இரவு”.. லிப்டில் சிக்கிக் கொண்ட தாயும் மகளும் உயிர்வாழ்வதற்காக செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் பழுதான லிப்டில் சிக்கிய தாயும் மகளும் ஒருவருக்கொருவர் சிறுநீரை சேகரித்து பருகி உயிர் பிழைத்து வாழ்ந்து வந்த நிலையில், மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிரவைத்துள்ளது.

சீனாவின் ஒரு 4 அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த 82 வயது தாயார் மற்றும் 64 வயது மகள் இருவரும், லிப்ட் வழியாக, தங்களது தளத்தில் உள்ள வீட்டுக்கு செல்ல முயற்சி செய்து லிப்டில் சென்றுள்ளனர். அப்போது லிப்ட் திடீரென இயங்குவதை நிறுத்தியதால், இருவருமே செய்வதறியாது தவித்துள்ளனர்.

யாரையும் உதவிக்கு அழைக்க முடியாமல் தவித்த இருவரும், வேறு வழியின்றி சிறுநீரை சேகரித்து உயிர் வாழ்ந்துள்ளனர். 96 மணி நேரத்துக்கு பின்னர் இருவரும் மீட்கப்பட்டு, ஜியான் நகரில் உள்ள கயாக்சின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி பேசிய மருத்துவர்,  இருவரும் தங்களது சமயோஜித புத்தியால் 4 பகல் மற்றும் 3 இரவுகள் உயிர் வாழ்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்