தினமும் '1 லட்சம்' பேருக்கு கொரோனா 'பரவுகிறது...' 'இது சரியான போக்கு இல்லை...' 'எச்சரிக்கும்' உலக சுகாதார 'அமைப்பு...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தினமும் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 81 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 34 லட்சத்து 81 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 41 லட்சத்து 87 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 லட்சத்து 38 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக தினமும் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் கூறுகையில், தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 1 லட்சம் பேருக்கு பரவ இரண்டு மாதங்களுக்கு மேல் ஆனது. ஆனால் தற்போது கடந்த இரண்டு வாரங்களாக தினமும் 1 லட்சம் பேருக்கு வைரஸ் பரவுகிறது என வருத்தம் தெரிவித்தார். குறிப்பாக தெற்கு ஆசியா மற்றும் அமெரிக்காவில் வைரஸ் பரவும் வேகம் கட்டுக்கடங்காமல் செல்கிறது என்றும் கூறினார்.

வைரஸ் மறு எழுச்சி பெறலாம் என்பதால் உலக நாடுகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்