அடுத்தடுத்து விழும் 'இடி'யால்... 'கதிகலங்கி' நிற்கும் 'அமெரிக்கா'... இத்தனை 'கோடி' பேருக்கு வேலையில்லாம போச்சா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வரும் நிலையில் வைரசைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு மூலம் வேலையிழந்து தவித்து வருவோர் அதற்கான உதவித்தொகை கேட்டு அரசிடம் விண்ணப்பித்து வருகின்றனர். வேலையிழந்து வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த வாரம் மட்டும் சுமார் 44 லட்சம் பேர் வரை உதவித் தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

ஒட்டு மொத்தமாக அமெரிக்காவில் வேலையிழந்து தவிப்போரின் எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சமாக உயர்ந்துள்ளது. இம்மாத இறுதிக்குள் இன்னும் அமெரிக்காவில் வேலை வாய்ப்பில்லாதவர் எண்ணிக்கை இன்னும் 20 சதவீதம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அதே வேளையில் மார்ச் மாதத்தில் இருந்து ஆறில் ஒரு நபர் வேலையிழந்து தவித்து வருவதாக மற்றொரு புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.

1929 ஆம் ஆண்டுக்கு பிறகு இப்படி ஒரு மோசமான நிலையை அமெரிக்கா சந்தித்ததில்லை என வல்லுனர்கள் தெரிவித்துள்ளது அமெரிக்க மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்