‘210 நாடுகளில் கொரோனா பாதிப்பு’... ‘எவ்வளவு நோயாளிகள் மீண்டுள்ளனர்’... விபரங்கள் உள்ளே!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் 210 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில், இந்த வைரசின் பாதிப்பில் இருந்து எவ்வளவு நோயாளிகள் மீண்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்திவருகிறது. தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா வைரசின் தாக்கம் எப்போது தணியும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது.
இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் 18 லட்சத்து 73 ஆயிரத்து 874 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 45 பேர் உயிரிழந்துள்ளனர். 4 லட்சத்து 35 ஆயிரத்து 185 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 13 லட்சத்து 22 ஆயிரத்து 644 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 50 ஆயிரத்து 798 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா வைரசால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் அமெரிக்கா, இத்தாலியை விஞ்சி முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 22,115 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இத்தாலியில் 19,899 பேர் உயிழந்துள்ளனர். ஸ்பெயினில் 17,209 பேரும், பிரான்சில் 14,393 பேரும், பிரிட்டனில் 10,612 பேரும், ஈரானில் 4,474 பேரும், சீனாவில் 3,341 பேரும் பலியாகி உள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இத்தாலியில் இருந்து வந்த மகன் குடும்பத்தால் பாதிப்பு’... ‘90 வயதில் கொரோனாவை வென்று’... ‘நாட்டுக்கே நம்பிக்கையூட்டிய முதிய தம்பதி’... ‘கைதட்டி ஆரவாரம் செய்த கேரளா மருத்துவர்கள்’... ‘ஆனாலும் செவிலியருக்கு நேர்ந்த சோகம்’!
- 'நான்கே நாளில் ஐந்திலிருந்து 7 லட்சமாக உயர்வு..'. 'அதிர்ச்சியை' ஏற்படுத்தும் 'வேகம்...' 'முன்பை' விட 'தீவிரமானது' தாக்கம்...
- ‘முதியவர்கள் இருவர் உள்பட’... ‘3 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ்’... 'தமிழகத்தில் 38 ஆக அதிகரிப்பு'!
- BREAKING: தமிழகத்தில் 4,100 பேர் மீது வழக்குப்பதிவு!... 400க்கும் மேற்பட்டோர் கைது!... காவல்துறை அதிரடி!
- ‘குவிந்து கிடக்கும் சவப்பெட்டிகள்’... ‘24 மணி நேரமும் இயங்கும் இடுகாடுகள்’... அழைக்கப்பட்ட ராணுவம்.... 'இத்தாலியில் நடக்கும் துயரம்'!
- 'சுவாச நோய்+அல்சைமர்+உயர் ரத்த அழுத்தம்+கொரோனா...!' "சோ வாட்..." எமனுக்கு 'டாட்டா' காட்டிய 100 வயது 'தாத்தா'...
- டிரோன் வைத்திருப்பவர்களுக்கு... விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுரை... வருகிறது புதிய கட்டுப்பாடு!