“அடுத்த வருஷம் ஸ்டில்பெர்த்தின் எண்ணிக்கை அப்படியே டபுள் ஆகலாம்!” - வேதனையுடன் யுனிசெப்!.. அதென்ன ஸ்டில்பெர்த்?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஸ்டில்பெர்த் (stillbirth)எனப்படும் கருச்சிதைவிலிருந்து மாறுபட்ட ஒரு சொல் உள்ளது.  அதாவது ஒரு பெண்ணின் மகப்பேறு வாரங்களான 28 வாரத்துக்கு இடையே கருப்பையிலேயே சிசு இறப்பு மற்றும் மகப்பேறு முடிந்த 36 வாரத்துக்குப்பின்னான காலத்தில் கூட நிகழும் குழந்தை உயிரிழப்பை இப்படி சொல்கிறார்கள்.

உலக அளவில், உலக வங்கி, உலக சுகாதார அமைப்பு, யுனிசெப் ஆகிய3 அமைப்புகளும் இணைந்து இந்த ஸ்டில்பெர்த் குறித்த அறிக்கையை தயாரித்துள்ளன. இதுகுறித்து யுனிசெப் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஹென்ரிட்டா ஃபேரே கூறும்போது, ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் என 16 வினாடிக்கு ஒரு குழந்தை ஸ்டில்பெர்த்தின் கீழ் உயிரிழப்பதாகவும், இதில் 84 சதவீதம் குறைந்த, நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் நிகழ்வதாகவும் அதற்கு காரணம் முறையான மருத்துவ, சுகாதார வசதிகள் இல்லாததும்தான் என கூறியுள்ளார்.

அத்துடன் குறிப்பிட்ட பெண்ணும், குடும்பமும், அவர்கள் சார்ந்த சமூகமும் தீராத மன உளைச்சலுக்கும், பண இழப்புக்கும் ஆளாவதாகவும், கடந்த வருடம் ஸ்டில்பெர்த்தின் கீழ் நேர்ந்த குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் ஒவ்வொன்றிலும் 4ல் 3 சம்பவங்கள் தெற்காசியாவிலும், சஹாரா ஆப்பிரிக்காவிலும் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உலகில் 50 சதவீதம் சுகாதாரச் சேவைகளை கொரோனா வீக்கமடைய வைத்துள்ள இந்த சூழலில், அடுத்த ஆண்டில் 117 வளர்ந்துவரும் நாடுகளில், மேலும் கூடுதலாக 2 லட்சம் குழந்தைகள் ஸ்டில்பெர்த்துக்கு ஆளாகலாம் என்றும்  ஹென்ரிட்டா ஃபேரே தெரிவித்துள்ளார்.

 

இதேபோல், பாதிக்கும் மேற்பட்ட ஸ்டில்பெர்த்கள் சஹாரா ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா நாடுகளிலும், ஐரோப்பா, வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்படுவதாகவும், நியூஸிலாந்தில் 6 சதவீதம் இந்த சம்பவங்கள் நிகழ்வதாகவும் ஹென்ரிட்டா ஃபேரே குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்