“தேர்தலே முடிஞ்சுருச்சு.. ஆனா இது இன்னும் முடியல!”.. ‘திரும்பவும்’ அட்டூழியம் செய்யும் கொரோனா.. ‘அல்லல் படும்’ அமெரிக்கா! அப்படி என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 லட்சத்து ஆயிரத்து 961 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 02 லட்சத்து 38 ஆயிரத்து 243 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் பலி எண்ணிக்கை 2 லட்சத்து 39 ஆயிரத்து 588 ஆக அதிகரித்துள்ளது என்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

மேலும்,  வார இறுதியில் கோவிட் தரவுகள் தாமதப்படுத்தப்பட்டதால், ஒரே நாளில் 2 லட்சம் பேருக்குக் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,535 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறைவாக கருதப்பட்டாலும்,  கடந்த ஒன்றிரண்டு மாதங்களில் இந்த மரண விகிதம் அதிகமாகவே உள்ளது.

தவிர, அமெரிக்கா முழுதும் 60 ஆயிரம் பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அதிபராக இருந்த போது, தொடர்ந்து கோவிட் 19-ன் தீவிரமாக இருந்ததை மறுத்து வந்ததுடன், அது தானாகவே போய்விடும் என்றும் கூறி கிறுகிறுக்க வைத்தார்.

இந்நிலையில் அமெரிக்க ஃபார்மா நிறுவனமான ஃபைசரும், அதன் ஜெர்மன் கூட்டாளி நிறுவனமான பயோஎன்டெக் நிறுவனமும் சேர்ந்து தங்களது வாக்சின் 90% திறம்பட செயல்படக்கூடியது என்று தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்