‘26 பைகளில் மனித உடல்கள்’.. கொரோனாவுக்கு மத்தியில் அரங்கேறிய கொடூரம்.. உலகை அதிரவைத்த கொலைகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த 10 நாட்களாக துண்டுதுண்டாக வெட்டப்பட்ட மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் போதைப்பொருள் கடத்தல் அதிகம் உள்ள நாட்டுகளில் ஒன்றாக மெக்சிகோ இருந்து வருகிறது. இங்கு பல்வேறு போதைப்பொருள் குழுக்களால் அடிக்கடி வன்முறை, கடத்தல், கொலைகள் நிகழ்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. இதில் கோஷ்டி மோதல் அதிகம் நடைபெறும் பகுதியாக ஜலிஸ்கோ மாகாணத்தின் தலைநகரான குவாடலஜாரா பகுதி இருந்து வருகிறது. இங்கு கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியிலும் மோதல் சம்பவங்கள் குறையாமல் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்நிலையில் குவாடலஜாரா பகுதிகளில் கடந்த 10 நாட்களில் மட்டும் துண்டுத்துண்டாக வெட்டப்பட்ட 12-க்கும் அதிகமான மனித உடல்கள் 26 பைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள ஜலிஸ்கோ மாநில அரசு வழக்கறிஞர் ஜெரார்டோ சோலிஸ், ‘3 ஆண்களின் சடலங்கள் ஒரு தகர சுரங்கத்திற்கு வெளியேவும்,  9 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணின் எலும்புகள் ஒரு சிறிய பண்ணையிலும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வெட்டப்பட்ட உடல்கள் அனைத்தும் 26 பைகளில் குவாடலஜாராவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடல்களின் எண்ணிக்கையை தடயவியல் அறிவியல் நிறுவனம் தீர்மானிக்கும்" என தெரிவித்துள்ளார்.

இந்த கொலை சம்பவங்கள் குறித்து தெரிவித்துள்ள அதிகாரிகள், இதுவரை 2 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அனைத்து உடல்களையும் கண்டறிய குறைந்தது ஒரு மாதம் ஆகும் என தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், இது பெரும்பாலும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களால் நடந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு மத்தியில் நடந்த இந்த கொலை சம்பவங்கள் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்