"ஒன்னு, ரெண்டு இல்ல... நூத்துக்கணக்குல இருந்துதுங்க!... எப்படிதான் அதுக்குள்ள வாழ்ந்தாரோ?... மிரண்டே போய்ட்டோம்!!!?" - 'அப்பார்ட்மெண்ட் வாசிகளை அதிரவைத்த நபர்!!!'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஸ்பெயினில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வசித்துவந்த ஒருவர் அவருடைய நூற்றுக்கணக்கான செல்லப் பிராணிகளுடன் வெளியேற்றப்பட்டுள்ளார்.

தெற்கு ஸ்பெயினின் வலேன்சியா பகுதியில் உள்ள கான்டியா நகரில் சபோர் என்ற நபர் ஒருவர் பிளாட் ஒன்றில் 110 பூனைகளுடன் வசித்துவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன் அந்த பிளாட்டிற்கு வந்த ஒரு ஜோடி பூனைகளின் மூலமே இந்த 100க்கும் மேற்பட்ட பூனைகள் பெருகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இதுபற்றி தகவலறிந்து அங்கு சென்ற விலங்குகளைப் பாதுகாக்கும் தொண்டு நிறுவனம் ஒன்று அந்த 1000 சதுர அடி பிளாட்டிலிருந்து அவரை வெளியேற்றியுள்ளது. அத்துடன் அவரிடமிருந்து அந்த பூனைகளை எல்லாம் கைப்பற்றிய அவர்கள் அவைகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை செலுத்தியுள்ளனர். பின்னர் அந்தப் பூனைகளை அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்