'800 கோடி மனுஷங்க வாழலாம்...' 'ஒரு லட்சம்' வருஷம் வாழ தேவையான 'அது' இருக்கு....! 'ஆனா ஒரே ஒரு சின்ன பிரச்சனை...' - நிலவு குறித்து வெளியான ஆய்வு முடிவு...!
முகப்பு > செய்திகள் > உலகம்நிலவில் ஆக்ஸிஜன் இருப்பது தொடர்பான விண்வெளி ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது மனிதர்கள் வாழ தேவையான ஆக்ஸிஜன் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மனிதர்கள் தங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் தாண்டி விண்வெளிக்கு சென்று ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பால்வழி அண்டத்தில் மனிதர்கள் வாழ தகுதியுடைய ஒரே கோள் உலகம் தான்.
ஆனால், பல நாடுகள் பல வருடங்களாக பால்வழி அண்டத்தில் மனிதர்கள் வாழ கூடிய சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறார்கள். அதில் ஒரு முயற்சி தான் நிலவில் ஆக்ஸிஜன் இருப்பது தொடர்பான ஆராய்ச்சி.
இதற்குமுன் நிலவில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்ட நிலையிலும் தண்ணீர், ஆக்சிஜன் போன்ற முக்கிய காரணிகள் குறித்து எந்த நேர்மறையான தகவல்களும் வெளியாகவில்லை. ஆனால், தற்போது நிலவின் மேற்பரப்பு குறித்து நம்ப முடியாத தகவல் ஒன்று ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
அதாவது, நிலவின் மேற்பரப்பில் சுமார் 800 கோடி மனிதர்கள் 1 லட்சம் ஆண்டுகள் வாழ தேவையான ஆக்ஸிஜன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்ஸிஜன் நிலவின் 'ரெகோலித்' பகுதியில் இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
ரெகோலித் என்பது நிலவின் மேற்பரப்பில் உள்ளடங்கியுள்ள பாறை மற்றும் தூசு அடுக்குகள் ஆகும்.
ஆனால், இதில் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால் நிலவில் இருக்கும் ஆக்ஸிஜன் வாயு வடிவில் நிலவில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கடந்த அக்டோபரில் ஆஸ்திரேலிய விண்வெளி முகமையும், அமெரிக்காவின் நாசாவும் இணைந்து ரோவார் ஒன்றை நிலவுக்கு அனுப்பி அங்கு இருக்கும் பாறைகளை சேகரித்து வந்துள்ளனர். அதன் மூலம் அந்த பாறைகளை கொண்டு மனிதன் சுவாசிக்க கூடிய ஆக்ஸிஜனாக மாற்றுவது எப்படி என்ற ஆய்வு நடக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கட்டுக்குள் வந்த கொரோனா!.. ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுமா'?.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
- இதவிட துல்லியமான 'நிலவை' பார்த்துருக்க முடியாது...! 'மொத்தம் 55,000 ஃபோட்டோஸ்...' '2000 ஃப்ரேம்கள்...' '186 ஜிபி டேட்டா...' இந்த 'ஒரு போட்டோ' ரெடி ஆக 4 நாட்கள் ஆயிருக்கு...! - கலக்கும் மாணவனின் 'வைரல்' போட்டோ...!
- "எனக்காக நீங்க இருந்தீங்க... இப்போ உங்களுக்காக"... சச்சின் எடுத்த அதிரடி முடிவு!.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!!
- ‘ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இருக்கு’!.. மகாராஷ்டிரா முதல்வர் தெரிவித்ததும் ‘அதிரடி’ அறிவிப்பை வெளியிட்ட ரிலையன்ஸ் நிறுவனம்..!
- ‘ஐடி நிறுவனம் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்’!.. மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போன சாஃப்ட்வேர் இன்ஜினீயர்.. ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய தாய்..!
- 'இது என் அன்பு மகனுக்காக நான் கொடுக்க போற பரிசு...' 'இத அவன் வாழ்க்கையில மறக்கவே கூடாது, அப்படி ஒண்ணா இருக்கும்...' - 2 வயசு மகனுக்கு அப்பா அளித்துள்ள சர்ப்ரைஸ்...!
- யாரெல்லாம் என்கூட நிலவுக்கு ஃப்ரீயா வர்றீங்க...? 'உங்களுக்கு இருக்க வேண்டியது ஒண்ணே ஒண்ணு தான்...' - நாம நிலவுல இருந்து பூமிய பார்க்கலாம்...!
- இன்னைக்கு ‘கல்யாண நாள்’!.. மனைவிக்கு காத்திருந்த மிகப்பெரிய ‘சர்ப்ரைஸ்’.. இப்படியொரு ‘கிப்ட்’ கொடுப்பார்னு கனவிலும் நினைக்கல..!
- 'அமெரிக்காவை தொடர்ந்து...' 'நிலாவில் தேசியக்கொடி நாட்டிய 2-வது நாடு...' வெற்றிகரமாக கொடியை நாட்டியது 'ரோவர்' இயந்திரம்...!
- 'அப்போ நிலவுக்கு போயிட்டு...' 'பூமிக்கு போன் பண்ணலாம் போலையே...' - நிலவில் வரப்போகும் 4G நெட்வொர்க்...!