செங்குத்தான பாறைல வெறுங்காலோடு அசால்ட்டாக ஏறிய வயசான துறவி .. ஆடிப்போன மலையேறும் வீரர்கள்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

செங்குத்தானை பாறை ஒன்றில் எந்த வித பாதுகாப்பு சாதனங்களும் இல்லாமல் சாதாரணமாக ஏறும் துறவி ஒருவரின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | இந்திய IT நிறுவனங்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் CEO.. திகைக்க வைக்கும் தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார்..!

இன்றைய காலகட்டத்தில் அனுபவ அறிவு மட்டுமே ஒருவருக்கு மிகப்பெரிய உயரத்தை அடைய வழிகாட்டுகிறது. ஒரு துறையில் படித்தவர்கள் கூட அதில் போதிய அனுபவம் கிடைக்காததால் பல்வேறு சிக்கல்களை சந்திப்பதையும் நாம் அன்றாட வாழ்க்கையில் பார்த்து வருகிறோம். அப்படி தொடர்ந்து ஒரு துறையில் பயிற்சி பெறுபவர்கள் விரைவிலேயே அதில் நிபுணர்களாக உயந்துவிடுகிறார்கள். அதேநேரத்தில் அவர்களுடன் தொழில்நுட்ப அறிவுடன் போட்டிபோடும் பலரும் தோல்வியையே சந்திக்க நேரிடுகிறது. இதற்கு உதாரணமான வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வைரல் வீடியோ

இந்த வீடியோவில் செங்குத்தான பாறையில் ஒருபுறம் மலையேறும் வீரர்கள் நிற்கிறார்கள். பாறையின் உச்சியில் மாட்டப்பட்ட கயிறின் மூலமாக மலையில் ஏற முயற்சிக்கிறார்கள் இந்த வீரர்கள். அப்போது அவர்களுக்கு சற்று தொலைவில் ஒரு வயதான துறவி ஒருவர் வருகிறார். அவரிடம் எந்த வித பாதுகாப்பு சாதனங்களோ, காலணிகளோ இல்லை. ஆனால், அவர் சரசரவென்று செங்குத்தான பாறையில் ஏறி அதன் உச்சிக்கு செல்கிறார்.

இதனை மலையேறும் வீரர் ஒருவர் வீடியோ எடுத்திருக்கிறார். இது தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை இதுவரையில் 5 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். இதில்,"அனுபவத்தின் அருமையை உணர்த்தும் வீடியோ" என்றும் "துறவிகள் தங்களுடைய ஆன்ம பலத்தின் மூலமாக கடினமான காரியங்களையும் எளிதில் செய்து முடிக்கின்றனர்" என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இந்த பதிவில் ஒருவர்,"எனக்கு தெரிந்தவரையில் அவர்களது யோகா பயிற்சிகள் மற்றும் தியானம் ஆகியவை காரணமாக துறவிகள் வலுவான உடலமைப்பை பெறுகிறார்கள் என நினைக்கிறேன்" என கமெண்ட் செய்துள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், நெட்டிசன்கள் அந்த துறவியின் செயலை பார்த்து பிரம்மித்துவருகின்றனர்.

Also Read | கரண்ட் பில்லை பாத்துட்டு ஹாஸ்பிட்டலில் அட்மிட்டான குடும்பத்தினர்.. 1 மாசத்துக்கு இவ்வளவு கோடி கட்டணமா?.. அமைச்சரே கொடுத்த விளக்கம்..!

MONK CLIMBS, MOUNTAIN, துறவி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்