இது மோனலிசா இந்தியன் வெர்சன்.. இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்.."அப்படியே நம்ம ஊரு ஆளு மாதிரி மாறிட்டாங்களே"
முகப்பு > செய்திகள் > உலகம்இன்றைய காலக்கட்டத்தில், இணையத்தை நாம் திறந்தாலே எக்கச்சக்க மீம்ஸ்களை நாம் பார்க்க முடியும்.
Also Read | 72 வருஷம் முன்னாடி காணாம போன ராணுவ வீரர்.. இத்தனை நாள் கழிச்சு குடும்பத்தினருக்கு கிடைத்த பரபரப்பு தகவல்!!
பலரது வாழ்க்கையில் கூட மீம்ஸ் என்பது மிக முக்கியமான ஒன்றாக தான் பார்க்கப்படுகிறது.
அது மட்டுமில்லாமல், ஒவ்வொரு நாளுக்கு ஏற்ப Trend'ல் இருக்கும் விஷயத்தினை வைத்து, அதற்கேற்ப மீம்ஸ்களையும் மீம்ஸ் க்ரியேட்டர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சில நேரங்களில், ட்ரெண்டில் உள்ள விஷயங்களாக இருந்தாலும், சில சமயங்களில் ட்ரெண்ட்டில் இல்லாதவை கூட மீம்ஸ் ஆக இணையத்தில் வலம் வருவதை நாம் பார்த்திருப்போம். அப்படி தான், தற்போது ஒரு விஷயம் இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி, நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த பிரபல ஓவியரான லியோனார்டோ டாவின்சியின் கைவண்ணத்தில் உருவானது தான் மோனாலிசா ஓவியம். உலக அளவில் புகழ் பெற்ற இந்த ஓவியம், பெரிய அளவில் ஓவியர் பிரியர்களால் பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருவதாகும். ஏற்கனவே, மோனாலிசா ஓவியம் தொடர்பாக சில மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வந்துள்ளது.
அந்த வரிசையில், தற்போது சற்று வித்தியாசமான வகையில் மோனலிசா ஓவியம் தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் ஒரு ரவுண்டு அடித்து வருகிறது. ட்விட்டர் மூலம் பிரபலமான இந்தியர் ஒருவர், மோனலிசா ஓவியம் இந்திய மாநிலங்களை அடையாளப்படுத்தும் வகையில் வித விதமான புடவைகள் மற்றும் அந்த மாநிலத்தை சேர்ந்த லுக்கில் இருக்கும் வகையிலான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல், இத்துடன் மாநிலங்களுக்கு ஏற்ப மோனலிசாவின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு தமிழக மாநிலத்திற்கு லிசா மாமி என்ற பெயரும், கேரளா மாநிலத்திற்கு லிசா மோள் என்ற பெயரும், தெலங்கானா மாநிலத்திற்கு லிசா பொம்மா என்ற பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் மோனலிசாவை தொடர்புபடுத்தி பகிரப்பட்டுள்ள மீம்ஸ்கள், நெட்டிசன்கள் பலரது லைக்குகளையும் அள்ளி வருகிறது.
அதே வேளையில், விளம்பர உத்திக்காகவும் இந்த புகைப்படங்கள் உருவாக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இருந்த போதிலும், நெட்டிசன்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read | அடேங்கப்பா, உடைஞ்சது 12,000 வருச 'மர்மம்'!!.. 10 வருஷ உழைப்புக்கு கிடைத்த விடை!!..
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்