'இத நம்பி தான இருந்தோம்... கடைசில இப்படி ஆயிடுச்சே!'.. அதிபர் டிரம்பின் தேர்தல் வியூகத்தை நொறுக்கிப் போட்ட அறிவிப்பு!.. என்ன செய்யப்போகிறது அமெரிக்கா?
முகப்பு > செய்திகள் > உலகம் அமெரிக்காவைச் சேர்ந்த பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா, கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் 11 நிறுவனங்களுள் ஒன்று. இந்த நிறுவனம் நவம்பர் 25க்கு முன் தடுப்பூசி அங்கீகாரத்தை பெறுவதற்கு வாய்ப்பில்லை என கூறியுள்ளது.
அமெரிக்க தேர்தலுக்கு முன்பு கொரோனா தடுப்பூசிகள் தயாராகும் என்ற டொனால்டு ட்ரம்பின் அறிக்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது.
மாடர்னாவின் இயக்குநர் ஸ்டீபன் பான்செல், ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் இதுபற்றி கூறியுள்ளார். நவம்பர் 25க்கு முன்பு தடுப்பூசி மாதிரி சோதனை முடிவுகளின் தரவுகள் பெறப்பட்டு, உணவு மற்றும் மருந்துத் துறைக்கு அனுப்பப்படும். தடுப்பூசி பாதுகாப்பு தரவுகள் நல்லமுறையில் வந்துள்ளது என அவர் கூறியுள்ளார். நவம்பர் 1ஆம் தேதிக்குள் நல்ல முடிவுகள் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதிகாரப்பூர்வமான தடுப்பூசியைக் கொண்டுவர போதுமான தரவுகள் எடுக்கப்படாததால்தான் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும், தேர்தல் நாளுக்கும், இதற்கும் சம்பந்தம் கிடையாது எனக் கூறியுள்ளார். மேலும், எங்கள் செயல்முறையின்படி, போதுமான தரவுகள் கிடைத்துவிட்டால், தேர்தலுக்கு முன்பேகூட தடுப்பூசி நடைமுறைக்கு வரலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி தயாரிப்புக்கு ட்ரம்ப் அனுமதி கொடுத்தபோது நவம்பர் 3ஆம் தேதிக்கு முன்பு கொரோனா தடுப்பூசிகள் தயாராகும் என அறிவித்திருந்தார். இது அரசியல்ரீதியான அறிவிப்பு என ஆராய்ச்சியாளர்கள் புரிந்துகொண்டதன் பேரில் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. ஏனெனில், செவ்வாய்க்கிழமை முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் நடந்த விவாதத்தில் இதை ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திரையில் வில்லன்... நிஜத்தில் ஹீரோ!.. நடிகர் 'சோனு சூட்'டுக்கு ஐ. நா. விருது!.. புகழ்ந்து தள்ளிய விஜயகாந்த்!.. ஏன் தெரியுமா?... வியப்பூட்டும் தகவல்!
- “இதெல்லாம் என் வேகத்தை குறைச்சுடுமா என்ன?”.. 150 குழந்தைகளைக் கடந்து.. லாக்டவுனிலும் தளராத ‘தாராள பிரபு’!
- 'அன்லாக் 5.0'... 'திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகளை எப்போது திறக்கலாம்?'... 'புதிய தளர்வுகளுடன்'... 'மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!'...
- “கொரோனா உயிரிழப்பு தகவல்” மற்றும் “புவி வெப்பம் அடைதல்”.. இரண்டு விவகாரங்களில் இந்தியாவை கடுமையாக ‘சாடிய’ டிரம்ப்!.. அப்படி என்ன சொன்னார்?
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
- 'ஒவ்வொரு மணி நேரத்துக்கும் எத்தனை கோடி?'... 'லாக்டவுன் நேரத்திலும் மலைக்க வைத்த முகேஷ் அம்பானி'... வெளியான பட்டியல்!
- VIDEO: "இந்த கோமாளி என்ன செய்றாருனு உங்களுக்கு புரியுதா?"... 'Live' விவாதத்தில்... அதிபர் டிரம்பை கிழித்து தொங்கவிட்ட ஜோ பிடன்!.. பரபரப்பு காட்சிகள்!
- 'சரி கடைசியா ஒருக்கா முகத்தை பாப்போம்'... 'இறந்தவரின் முகத்திரையை விலகிய உறவினர்கள்'... சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி திருப்பம்!
- “ஒரே ஒரு குடும்பம் நடத்திய பார்ட்டி!”.. நம்பி கலந்துகொண்டவர்களில் 900 பேருக்கு ஏற்பட்ட கதி! .. மின்னல் வேகத்தில் பறந்த அடுத்த உத்தரவு!
- 'பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே'... 'கொரோனா தடுப்பூசி உற்பத்தியில்'.... 'சீரம் நிறுவனம் எடுத்துள்ள புதிய அதிரடி முடிவு!!!'...