ராத்திரி 2 மணிக்கு கத்திய பூனை.. அரை தூக்கத்துல எழுந்து பார்த்த உரிமையாளர்.. "அடுத்து நடந்தது தான்.." பரபரப்பு சம்பவம்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பொதுவாக, பலரும் தங்களின் வீட்டில் பாதுகாப்பான செல்ல பிராணிகளாக நாய்களை வளர்ப்பது வழக்கம். அதே போல, நாய்களுக்கு நிகராக பூனைகளும் சிலரின் செல்ல பிராணிகளாக வளர்க்கப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | Bank-ல நகை அடகு வெச்ச பணம்.. Safe-ஆ இருக்கும்னு ஸ்கூட்டில வெச்ச பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

அந்த வகையில், Mississippi என்னும் பகுதியை சேர்ந்த செல்லப்பிராணி பூனை ஒன்று செய்த சம்பவம், தற்போது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Mississippi-யின் Belden என்னும் பகுதியில் வாழ்ந்து வருபவர் Fred Everitt. 68 வயதாகும் இவர், தன்னுடைய வீட்டில் Bandit என்ற பெயரில் பூனை ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார்.

அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், தனது பூனையான Bandit, நள்ளிரவில் சுமார் 2 மணியளவில், தனது அறைக்குள் வந்து, "Meow Meow" என கத்தியபடி, தன்னை எழுப்பியதாக Fred தெரிவித்துள்ளார். அதே போல, Fred போர்த்தி இருந்த போர்வையையும் இழுத்து, அவரது கையையும் அந்த பூனை பிராண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை அப்படி ஒரு பழக்கத்தினை கொண்டிராத தனது பூனையான Bandit, நள்ளிரவில் அப்படி செய்ததால், Fred குழப்பம் அடைந்தார். தொடர்ந்து, என்ன நிகழ்ந்தது என்பதை அறிந்து கொள்ள Fred எழுந்து வெளியே வந்துள்ளார். அப்போது, இரண்டு மர்ம நபர்கள், வீட்டின் பின் கதவை திறக்க முயற்சி செய்வதைக் கண்டு Fred அதிர்ந்து போயுள்ளார். அதில் ஒருவரின் கையில் துப்பாக்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைக் கண்டதும், தன்னிடம் இருந்த துப்பாக்கியுடன் வீட்டின் சமயலறைக்கு Fred சென்றதும் மர்ம நபர்கள் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பித்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக பேசும் Fred, "இது ஒரு மோதல் சூழலாக மாறவில்லை. ஆனால், அது என்னுடைய பூனையால் மட்டுமே நிகழ்ந்ததாக நான் நினைக்கிறேன். காவல் காக்கும் நாய்களை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இது ஒரு காவல் பூனை" என நெகிழ்ந்து போய் Fred தெரிவித்துள்ளார்.

Fred கூறியது போலவே, ஒரு வேளை பூனை Bandit அழைக்க தவறி இருந்தால், அந்த மர்ம நபர்கள் இரண்டு பேரும் உள்ளே வந்து, அங்குள்ள நிலைமையே மோசமாக கூட மாறி, விபரீதத்திற்கு வழி செய்திருக்கலாம். ஆனால், சரியான நேரத்தில், தனது உரிமையாளரை அழைத்து அவரது உயிரைக் காப்பாற்றவும் வழி செய்த பூனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read | குடும்பமா சேர்ந்து கொள்ளை.. "அடிச்ச பணத்துல 2 கோடி ரூபாய்க்கு வீடு.. கூடவே" அதிர வைத்த வாக்குமூலம்

MISSISSIPPI CAT, WOKE UP, OWNER, MIDNIGHT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்