மொத்த நாட்டையும் பதற வச்ச கேப்ஸ்யூல்.. பாலைவனத்துக்கு நடுவே நடந்த மிராக்கிள்.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவில் காணாமல்போனதாக சொல்லப்பட்ட கதிரியக்க கேப்ஸ்யூலை அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | 500 மாணவிகளுக்கு மத்தியில் ஒரே ஒரு மாணவனா? .. பரீட்சை ஹாலில் மயக்கமே போட்டாப்ல.. பரபரப்பு சம்பவம்.!
ஆஸ்திரேலியாவின் மேற்கு நியூமெனில் உள்ள ரியோ டின்டோ சுரங்கத்திலிருந்து சமீபத்தில் ஒரு டிரக் கிளம்பி இருக்கிறது. இது பெர்த் மாகாணத்தில் உள்ள இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சுரங்கத்தின் சேமிப்புக் கிடங்கிற்கு பயணித்திருக்கிறது. சுமார் 1400 கிலோ மீட்டர் தொலைவு பயணித்துள்ள இந்த ட்ரக்கில் இருந்து வெள்ளி கேப்சியூல் ஒன்று காணாமல் போயிருக்கிறது. சீசியம் - 137 எனும் ஆபத்தான கதிரியக்க தனிமம் அதில் இருந்ததாக தகவல்கள் வெளியானது.
8 மில்லி மீட்டர் உயரமும் 6 மில்லி மீட்டர் அகலமும் கொண்ட இந்த கதிரியக்க கேப்ஸ்யூல் ஆபத்தானதாக கருதப்படுகிறது. சுரங்கத்தில் இரும்பு தாதுக்களை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களில் இந்த கேப்ஸ்யூல் பயன்படுத்தப்படுகிறது. இதனையடுத்து அதனை கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
Images are subject to © copyright to their respective owners.
இதனையடுத்து கையடக்க கதிர்வீச்சு கண்டறிதல் சாதனங்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் இந்த கேப்ஸ்யூலை கண்டுபிடிக்கும் பணிகளில் அதிகாரிகள் இறங்கினர். சுமார் 300 ஆண்டுகளுக்கு இந்த கேப்ஸ்யூல் ஆபத்தானது என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கேப்ஸ்யூல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி 16 ஆம் தேதி டிரக் பெர்த்தை அடைந்த போதிலும் அதில் இருந்த பெட்டிகள் ஜனவரி 25 ஆம் தேதி தான் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அப்போதுதான் கேப்ஸ்யூல் காணாமல்போனது தெரியவந்திருக்கிறது. உடனடியாக உள்ளூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கேப்ஸ்யூலை கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. மேலும் சுகாதாரத்துறையில் உள்ள கதிரியக்க பிரிவு அதிகாரிகளும் இந்த தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதன் பலனாகவே கேப்ஸ்யூல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் காணாமல்போன கேப்ஸ்யூலில் இருந்த சீரியல் எண்ணை கொண்டு பரிசோதித்து காணாமல்போன கேப்ஸ்யூல் கிடைத்துவிட்டதை உறுதிசெய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கேப்ஸ்யூல் காரணமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கதிரியக்க கேப்ஸ்யூல் காணாமல்போனதாக தகவல் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் அது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அடுத்த 300 வருஷத்துக்கு டேஞ்சர்.. காணாமல்போன கதிரியக்க கேப்ஸ்யூல்.. மொத்த படையையும் இறக்கிய நாடு.. திகிலூட்டும் பின்னணி..!
- ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து கூலித் தொழிலாளியின் மகளை பெண் கேட்ட இளைஞர்.. படுஜோராக நடந்த திருமணம்!
- இளைஞருக்கு வந்த மெசேஜ்.. அக்கவுண்ட்ல கிரெடிட் ஆன ₹4 கோடி ரூபாய்.. மனுஷன் அடுத்து செஞ்ச விஷயம் இருக்கே.. அவசரப்பட்டுட்டியே குமாரு..!
- கால் உடைந்த நிலையில் ஆஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வெல்.. பிறந்தநாள் பார்ட்டியில் விபத்து! மருத்துவமனையில் இருந்து அவரே வெளியிட்ட வீடியோ
- பாதியில் நின்ன படிப்பு.. உடனே இளைஞர் எடுத்த புது ரூட்.. "ஒரு வருஷத்துல இத்தன கோடி ரூபாய் வருவாயா?"
- "இவரைப் பத்தி ஒரே ஒரு தகவல்.. ₹5 கோடி கொடுக்க ரெடி".. ஆஸ்திரேலிய போலீசால் வலைவீசி தேடப்படும் இந்தியர்.. உறையவைக்கும் பின்னணி..!
- ஒரு கையில கேட்ச்.. MATCH-யே மாத்துன தருணம்.. கோலியை பாராட்டி அனுஷ்கா ஷர்மா போட்ட கியூட்டான போஸ்ட்..!
- "யப்பா, என்ன ஷாட் இது?".. வெஸ்ட் இண்டீஸ் வீரர் அடிச்ச அந்த ஒரு 'சிக்ஸ்'.. வீடியோ'வ பாத்து அரண்டு போன ரசிகர்கள்!!
- "என்னமோ தப்பா நடக்குது".. கரை ஒதுங்கிய 200க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள்.. நிபுணர்கள் சொல்லிய அதிர்ச்சி தகவல்..!
- "உள்ள போனவங்க யாரும் உயிரோட வெளியே வந்தது கிடையாது".. 100 வருடங்களுக்கு மேலாக தொடரும் மர்மம்.. உறையவைக்கும் பின்னணி..!