'பனிச்சறுக்கு விளையாடச் சென்று மாயமான இளைஞர்!'.. ‘தேடிச்சென்ற மீட்புக் குழுவினருக்கு’ காத்திருந்த ஆச்சரியம்.. இளைஞரின் சமயோஜிதத்தை பாராட்டிய போலீஸார்!
முகப்பு > செய்திகள் > உலகம்கனடாவில் பனிச்சறுக்கு விளையாட சென்ற இளைஞர் ஒருவர் வழிதவறிப் போய் விட்டதை அடுத்து அவர் தேடப்பட்டு வந்தார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த இளைஞர் Nicolas Stacy-Alcantara, கடந்த சனிக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில், தான் வழி தவறிவிட்டதை புரிந்துகொண்டார். எனினும் அவர் காணாமல் போய் விட்டதாக எண்ணி அவருடைய குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதுகுறித்து போலீசார் உடனடியாக தாமதிக்காமல் அவரை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மீட்புக் குழுவினர் அந்த இளைஞரை தேடிப் புறப்பட்டனர். கூகுள் மேப் மூலம் அவருடைய லொகேஷனை கண்டுபிடிக்க முயன்று ஒரு இடத்துக்கு போலீசார் சென்றுள்ளனர். அந்த இடத்தில் அந்த இளைஞரின் பனிச்சறுக்கு வாகனம் அங்கு நிறுத்தப்பட்டிருந்ததை கவனித்தனர்.
பின்னர் அருகே சென்றதும் அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. ஆம், தான் எப்படியோ வழி தவறிவிட்டதை உணர்ந்து கொண்ட அந்த இளைஞர் தனது பனிச்சறுக்கு வாகனத்தை யாரேனும் தேடி வரும் பொழுது அவர்கள் கண்ணில் படவேண்டும் என்பதற்காக நிறுத்தி வைத்திருக்கிறார். மேலும் அவர் தனக்கென ஒரு தனி குழி ஒன்றை தோண்டியிருக்கிறார். அந்த பனி குகைக்குள் அவர் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டுள்ளார். அத்துடன் தான் எடுத்துச் சென்ற உணவையும் தண்ணீரையும் நேரத்துக்கு சிறிது சிறிதாக பிரித்து அருந்தியுள்ளார்.
இளைஞரது இந்த சமயோஜித புத்தி போலீசாரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இத்தனையையும் செய்துவிட்டு ரிலாக்ஸாக குகைக்குள் அமர்ந்திருந்த அந்த இளைஞரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். அத்துடன் தான் கற்றிருந்த பாதுகாப்பு வழிமுறைகளை சரியான தருணத்தில் பயன்படுத்திய அந்த இளைஞரை மீட்புக்குழுவினர் வெகுவாக பாராட்டினர். மேலும் தங்களுடைய வேலையை அந்த இளைஞன் எளிதாக்கிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கலிபோர்னியாவைச் சேர்ந்த என்கிற வேறொரு இளைஞனும் இதே மாதத்தில் இப்படி உத்தா எனும் இடத்தில் இருக்கிற பனிச்சறுக்கு பகுதியில் குகையில் அமைந்து கொண்டு 30 மணி நேரம் பாதுகாப்பாக இருந்து பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் அரங்கேறி ஏதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Video: “கண்ட்ரோலா இருப்பேன்.. திரும்பவும் நான் தான் ஓட்டுவேன்!” - ‘அடம் பிடித்த’ கோவக்கார கிளி!.. யார் இவர்?.. சென்னையில் தொடரும் ‘போதை’ சம்பவங்கள்! வீடியோ!
- 'நீலாம்பரி போல வீர வசனம்'... 'போதையில் போலீசாரிடம் இளம்பெண் வச்ச கோரிக்கை'... 'என்னம்மா சொல்ற'?... நள்ளிரவில் நடந்த பரபரப்பு!
- ‘இப்படி ஒரு விறுவிறுப்பான கதையா?’ - படிக்கத் தூண்டும் ‘A Madras Mystery’ - கமல்ஹாசனால் வெளியிடப்பட்ட ‘புத்தகம்!’
- “கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா?”.. ‘கண்டறிய உதவிய மருத்துவமனை உரிமையாளர் கைது!’ .. ‘நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!’
- ‘உலகின் முதல் கொரோனா நோயாளி மாயம்’?!.. பரபரப்பை கிளப்பிய உலக சுகாதார அமைப்பு..!
- 'அமெரிக்க மாப்பிளைன்னு ஒன்னுக்கு ரெண்டா செஞ்சோம்'... 'கல்யாணம் ஆன முதல் நாளே கேட்ட கேள்வி'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- 'ஓரமா போய் விளையாடுங்கப்பா!'.. போலி தடியடி நடத்திய போலீஸ்!.. சாதூரியத்தால் தடுத்து நிறுத்தப்பட்ட ‘இரண்டு ஊர் சண்டை’!
- 'வெற்றிப் படிகட்டு!'.. '30 நிமிஷத்துல 33 புளோர்!'.. சைக்கிளில் காலை ஊன்றாமல் ஏறி.. அசால்ட் பண்ணிய ‘அநாயச மனிதர்!’ .. வைரல் வீடியோ!
- 'ஹலோ... யாரும்மா நீங்க?.. இது போலீஸ் ஸ்டேஷன்'!.. 'என்னைய பாத்தா யாருனு கேட்ட'!?.. மப்டி உடையில் வந்த பெண் துணை கமிஷனர்!.. பாவம் அந்த பெண் போலீஸ்!
- “பிரிஸ்பேன் ஜல்லிக்கட்டில் இறங்குனதுமே விக்கெட்டை அள்ளிய சின்னப்பம்பட்டி காளை!!.. இது டிரைய்லர் தான்” - புழுதி தெறிக்கும் பதிவுகள்!