"நான் பொறந்த 10 நாளுல என்ன தூக்கி போட்டுட்டாங்க..." ஆதங்கப்பட்ட 'அழகி'... '40' ஆண்டுகள் கழித்து தாயைக் கண்டுபிடித்த போதும்... தெரிய வந்த 'பேரதிர்ச்சி'!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் அமைந்துள்ள நெவாடா என்னும் மாநிலத்தில் கடந்த 1980 ஆம் ஆண்டு, அங்குள்ள விமானத்தின் நுழைவு வாயிலில் இரண்டு விமானிகளால் ஒரு பச்சிளம் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.

ஆனால், அந்த குழந்தை அங்கு எப்படி வந்தது என்பதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. கிடத்தட்ட பிறந்து 10 நாட்களேயான அந்த குழந்தையை, அமெரிக்க தம்பதி ஒன்று, தத்தெடுத்து வளர்த்துள்ளது. அந்த குழந்தையின் பெயர் எலிசபெத் ஹன்டர்சன் (Elizabeth Hunterson). எலிசபெத்திற்கு தற்போது 41 வயதாகும் நிலையில், 2004 ஆம் ஆண்டு இவர் மிஸ் நெவாடா பட்டத்தையும் வென்றுள்ளார்.

மிகவும் அன்பான ஒருவரது வீட்டில் எலிசபெத் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டாலும், தனது வாழ்நாள் முழுவதும் ஏன் தன்னை உண்மையான பெற்றோர்கள் கை விட்டுச் சென்றனர் என்பதை யோசித்துக் கொண்டே வாழ்க்கையை கழித்துள்ளார். அது மட்டுமில்லாமல், தான் தினந்தோறும் சந்திக்கும் மக்களை பார்க்கும் போது, 'அவர்கள் எந்த வகையிலாவது தனக்கு உறவினர்களாக இருப்பார்களா?' என்று எண்ணிக் கொண்டே, தனது வாழ்நாளை கழித்து வருவதாக எலிசபெத் கூறியுள்ளார்.

இப்படி இருக்கையில், 2018 ஆம் ஆண்டில் தனது தந்தை யார் என்பதை கண்டுபிடித்துள்ளார். ஆனால், அவர் 2004 ஆம் ஆண்டிலேயே இறந்து விட்டார் என்ற சோக செய்தி கிடைத்துள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு DNA சோதனை சேவை மையம் ஒன்றின் மூலம் தன்னை பெற்றெடுத்த தாய் யார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்துள்ளார்.

அதன் மூலம், ஒரு வழியாக தனது தாயைக் கண்டுபிடித்த எலிசபெத், 'ஏன் தன்னை விமான நிலையத்தின் வாசலில் தூக்கிப் போட்டு விட்டு சென்றீர்கள்?' என கேட்டுள்ளார். ஆனால், அதற்கு எலிசபெத்தை பெற்றெடுத்த தாய் கூறியுள்ள பதில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக, எலிசபெத்தை வளர்க்க முடியாததால், தனது தோழி ஒருவரிடம் குழந்தையைக் கொடுத்து காப்பகம் ஒன்றில் சேர்க்குமாறு கூறியுள்ளார். ஆனால், அவரின் தோழியோ, எலிசபெத்தை விமான நிலையத்தில் போட்டு விட்டுச் சென்றுள்ளார்.

கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் கழித்து தனது உண்மையான தாயைக் கண்டுபிடித்தாலும், இந்த நம்பிக்கையற்ற உறவைத் தொடர தனக்கு விருப்பமில்லை என்றும், தனக்கு ஏற்கனவே தாய் இருப்பதாக தனது வளர்ப்பு தாயை எலிசபெத் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும், தன்னை பெற்றெடுத்த தாயுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் எலிசபெத் முடிவு செய்துள்ளார்.

மற்ற செய்திகள்