"இனி அது என் குழந்தை".. சிரியா பூகம்பத்தின் போது பிறந்த 'மிராக்கிள்'.. உயிரை கொடுத்து காப்பாத்திய டாக்டரின் நெகிழ வைக்கும் செயல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சிரியாவில் பூகம்பத்தின்போது பிறந்த குழந்தையை தானே வளர்க்க இருப்பதாக அறிவித்திருக்கிறார் மருத்துவர் ஒருவர்.

Advertising
>
Advertising

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | "எங்க இலைக்கு ஏன் பன்னீர் வைக்கல".. தகராறில் இறங்கிய மாப்பிள்ளை வீட்டினர்..? கல்யாண வீட்டில் நடந்த சோகம்..!

சிரியாவில் நேர்ந்த மோசமான நிலநடுக்கம் பலரையும் ஆதவற்றை நிலைக்கு தள்ளியிருக்கிறது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் சிரியாவின் Jindayris பகுதியில் சரிந்து விழுந்த வீட்டினுள் உயிருடன் ஒரு குழந்தையை மீட்பு படை வீரர்கள் காப்பாற்றியுள்ளனர். அந்த குழந்தையை தூரத்து உறவினர் ஒருவர் அஃப்ரின் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.

துரதிருஷ்ட வசமாக அந்த குழந்தையின் தாய், தந்தை மற்றும் உடன் பிறந்தவர்கள் அனைவரும் பூகம்பத்தால் உயிரிழந்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அந்த குழந்தை மீட்கப்படும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வந்தன. இதனை தொடர்ந்து பலரும் அந்த குழந்தையை தத்தெடுத்து வளர்க்க இருப்பதாகவும், மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு போன் செய்து கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில், அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்துவரும் டாக்டர். காலித் அத்தியா குழந்தைக்கு அயா எனப் பெயர் சூட்டியுள்ளார். அரபு பெயரான அயா என்றால் ஆங்கிலத்தில் மிராக்கிள் என அர்த்தமாம். மேலும், தொடர்ந்து அயா-வை வளர்க்க பலரும் விருப்பம் தெரிவித்து போன் செய்தததாகவும் ஆனால், தான் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார் காலித். இதுகுறித்து அவர் பேசுகையில்"எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அயாவை விட 4 மாதங்கள் மூத்தவள். தற்போது என்னுடைய மனைவி அயாவிற்கு பாலூட்டி வருகிறார். யாரிடமும் குழந்தையை ஒப்படைக்க போவதில்லை. குழந்தையின் தூரத்து உறவினர்களுக்காக காத்திருக்கிறோம். நானே இந்த குழந்தையை எனது மகள் போல வளர்க்க இருக்கிறேன்" எனக்கூறி இருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இதுவரையில் 3000 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தொடர்ந்து இடிபாடுகளுக்கு மத்தியில் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சூழ்நிலையில் டாக்டர். காலத்தின் இந்த செயல் பலரையும் நெகிழ செய்திருக்கிறது.

Also Read | "நான் அவுட்டானது பிரச்சனை இல்ல, அசிம் வெளிய வந்திருந்தா எனக்கு செருப்படி தான்"..

SYRIA, SYRIA EARTHQUAKE, TURKEY EARTHQUAKE, BABY, BORN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்