'இதெல்லாம் முடியறதுக்குள்ள ஏராளமான உயிரிழப்பு இருக்கு'... 'ஆனா கொரோனாவால இல்லை'... 'பில்கேட்ஸ் எச்சரிக்கை!'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதிப்பு முடிவுக்கு வருவதற்குள் இன்னும் ஏராளமானோர் உயிரிழப்பார்கள் எனவும், ஆனால் உயிரிழப்புகளுக்கு கொரோனா காரணமாக இருக்காதெனவும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா பாதிப்பு குறித்து பேசியுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், "கொரோனா தடுப்பூசி வரும் 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் நியாயமான விலையில் மிகப்பெரிய அளவில் உற்பத்தியில் இருக்கும். உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, கொரோனா தொற்றின் பரவல் குறையும். கொரோனா பாதிப்பு முடிவுக்கு வருவதற்குள் இன்னும் ஏராளமானோர் உயிரிழப்பார்கள். ஆனால் 90 சதவீதத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் கொரோனாவுடன் தொடர்பில்லாதவையாக இருக்கும்.
ஊரடங்கு நடவடிக்கையால் பிற நோய்களுக்கான மருத்துவ வசதி கிடைப்பதை தடைப்பட்டுள்ளதால், அதன் விளைவாக மலேரியா மற்றும் எச்.ஐ.வி. நோயால் உயிரிழப்பு அதிகரிக்கும். கொரோனா பாதிப்பு தொடர்பான நடவடிக்கைக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை 350 மில்லியனுக்கும் அதிகமான நிதியை அளித்துள்ளது. ஆனால் அது போதாது. இன்னும் அதிகமாக தேவைப்படுகிறது. டிரில்லியன் கணக்கான செலவுகளை ஏற்படுத்தும் பொருளாதார சேதத்தை தடுக்க கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் பல பில்லியன் டாலர்கள் செலவிடப்பட வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை, பல பின்தங்கிய நாடுகளில் சேத விவரங்களை துல்லியமாக கணக்கிடுவது மிகவும் கடினம். ஆப்பிரிக்காவில் ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் 25,000க்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகளும், இந்தியாவில் கிட்டத்தட்ட 52,000 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. சமீபத்திய ஆராய்ச்சியில், தற்போதுள்ள கொரோனா வைரஸ்கள் புதிய கொரோனாவுக்கு எதிராக குறிப்பிட்ட அளவிலான பாதுகாப்பை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. உலக மக்கள்தொகையில் சுமார் 30 முதல் 60 சதவீதத்தினருக்கு கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி போட வேண்டும். அதிர்ஷ்டவசமாக இது அம்மை நோய் அல்ல என்பதால், 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடத் தேவையில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்றும் 6 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை .. 116 பேர் பலி!! முழு விபரம்!
- ‘கொசு மாஸ்க் போடுறது இல்ல...’ ‘சோசியல் டிஸ்டன்ஸ் பத்தி அதுக்கு தெரியாது...’ - கொசுவால பரவுற தொற்றை நினைவூட்டி பில் கேட்ஸ் எச்சரிக்கை...!
- 'இந்த துறையில் மட்டும் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு'... 'அதுவும் இந்தாண்டு இறுதிக்குள்'... 'வெளியாகியுள்ள மகிழ்ச்சி தரும் செய்தி!'...
- 'உலகமே தடுப்பு மருந்துக்காக காத்திருக்க'... 'நிலைகுலைய வைத்துள்ள பாதிப்பிலும்'... 'வியப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க விஞ்ஞானியின் கருத்து!'...
- 'எங்க வீட்டு குலதெய்வமே போயிடுச்சு!'.. மனைவியின் பிரிவால் ஜவுளிக்கடை உரிமையாளர் விபரீத முடிவு!.. ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 4 பேர் பலி!
- எஸ்.பி.பியை ‘இப்படி’ குறிப்பிட்ட ரஜினி!.. ‘கூட்டுப் பிரார்த்தனை’ அழைப்பில் மனதை உருக வைத்த ‘வார்த்தை!’
- '1.2 லட்சம் பேருக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்'... 'கொரோனா காலத்திலும்'... 'குட் நியூஸ் சொன்ன பிரபல ஐடி நிறுவனம்!'...
- 'எங்க கையில எதுவும் இல்ல... அவங்க தான் முடிவு செய்யணும்'!... தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும்?.. ஐசிஎம்ஆர் 'பரபரப்பு' கருத்து!
- ‘பாதிப்பை விட அதிகமான குணமானோர் எண்ணிக்கை!’.. ‘மொத்தமாக சிகிச்சையில் இருப்பவர்கள் எத்தனை பேர்?’.. இன்றைய கொரோனா நிலவரம்!
- நீயா? நானா?.. இந்தியாவிற்கு 3 கொரோனா தடுப்பு மருந்துகள்!.. கடும் போட்டியில் வெற்றிபெறப்போவது யார்!?